வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

தம்மடிக்கும் அபிராமியின் புகைப்படம், கலாச்சாரத்தை கெடுக்கும் பிக்பாஸ் அல்டிமேட்.. தட்டிக் கேட்பாரா ஆண்டவர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நேற்று கமல்ஹாசன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கி வைத்தார்.

இதற்கு முன்பு பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலர் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாவதால் போட்டியாளர்களின் பல ரகசியங்கள் ரசிகர்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும்.

அப்படி ஒரு விஷயம் தான் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் புகை பிடிப்பதற்கு வசதியாக ஒரு தனி ரூம் இருக்கிறது. அதில் புகை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் யார் வேண்டுமானாலும் செல்லலாம்.

இதற்கு முந்தைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது குறித்தகாட்சிகளை நாம் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் புகை பிடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அபிநய், நிரூப், ஷாரிக் ஆகியோர் புகை பிடிக்கின்றனர். அதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அவர்களுடன் இணைந்து அபிராமியும் புகை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்தக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் ஒரு பெண் இப்படி செய்யலாமா என்று அபிராமியை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர். ஒரு சிலர் புகை பிடிப்பது அனைவரின் நலத்திற்கும் கேடு இதில் அபிராமியை மட்டும் திட்டுவது ஏன் என்றும் கூறுகின்றனர்.

abirami-smoke
abirami-smoke

உண்மையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் ஒருவர் யார் என்பது நமக்கு தெளிவாக தெரிய போகிறது. இதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். நமக்கு போரடித்தால் உடனே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் வசதி இருப்பதால் இனி வரும் நாட்களில் பல சுவாரஸ்யங்களும், ரகசியங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

smoking-bigg-boss-ott
smoking-bigg-boss-ott

Trending News