வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மணிரத்னம் படத்தால் ஒன்று சேர்ந்த அபிஷேக்-ஐஸ்வர்யா ஜோடி.. இதில், சாய் பல்லவிக்கு என்ன வேலை?

ராவணன் படக் கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்றவுள்ளனர். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சினிமாவில் தான் அறிமுகமான காலம் தொட்டு இன்று வரை ரசிகர்களின் பல்சை அறிந்து வைத்திருப்பவர் மணிரத்னம். அவர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமென்ற விருப்பமும் ஆசையும் எல்லா நடிகர், நடிகைகளுக்கும் இருக்கும், அவருடன் பணியாற்றிட வேண்டும் என ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இருக்கும்.

அப்படி அவர் பல்லவி அனுபல்லவி படத்தில் இருந்து நிகழ்த்திக் காட்டிய மேஜிக், பொன்னியின் செல்வனின் வசூல் வேட்டை நடத்திக் காட்டி, தற்போது கமலை வைத்து இயக்கி வரும் தக்லைஃப் வரை தொடர்கிறது. நாயகன் படத்திற்குப் பின் சுமார் 30 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் – கமல் கூட்டணியில் உருவாகி வரும் படம் தக்லைஃப். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, இப்படத்தின் டீசர் கமல் பிறந்த நாளில் வெளியானது.

3 வது முறை கூட்டணி சேரும் ஐஸ்வர்யா, அபிஷேக், மணிரத்னம் கூட்டணி!

அடுத்தாண்டு ஜீன் 5 ஆம் தேதி ரிலீஸாகும் இப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பும் ஏற்பட்டு, வியாபாரமும் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, மணிரத்னம் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில்,ராவணன் படத்திலும், குரு படத்திலும் ஜோடியாக நடித்த ரியல் ஜோடியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே இந்த ஜோடியின் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான படமும் சரி, பாடல்களும் சரி வேற லெவல் மற்றும் எவர்கிரீன் வரிசையில் இருக்கும் நிலையில் இப்புதிய படம் என்ன ஜர்னரில் இருக்கப் போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

மணிரத்னம் படத்தால் ஒன்று சேர்ந்த ஜோடி

சில மாதங்களாக, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்துவருவதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பதாக கூறப்படுவது அவர்கள் மீண்உம் ஒன்று சேர்ந்துவிட்டதாகவும் தெரிகிறது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சாய்பல்லவிக்கு என்ன வேடம்?

அதேசமயம், அமரன் பட ஆடியோ விழாவில் நான் உங்கள் ரசிகர், அடுத்த படத்தில் உங்களுடன் இணைந்து நடிக்க ஆசை என மணிரத்னம் கூறியிருந்த நிலையில், இப்படத்தில் சாய்பல்லவி முக்கிய ரோலில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை படம் ஆரம்பிக்கப்பட்டால் இப்படம் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய படங்களில் ஒன்றாக இருக்கும், இது பான் இந்தியா படமாகவும் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Trending News