புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அபிஷேக்கை பார்த்துவிட்டு தலைகால் புரியாமல் ஆடிய போட்டியாளர்கள்.. விஷப்பூச்சினு தெரியாம மறுபடியும் சிக்கின்னர்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வார இறுதியில் வெளியேறிய அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி வருகை தந்துள்ளார். அபிஷேக் சென்றபின்பு சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகிய போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

இந்த கால இடைவெளியில் அபிஷேக் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் யார் எப்படி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று உள்ளே இருந்தபோதும், அதன் பிறகு வெளியே சென்ற பின்பும் உன்னிப்பாக கவனித்து வைத்திருப்பார். இன்னிலையில் மீண்டும் அவர் பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக நுழைந்திருப்பது மற்ற போட்டியாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தக்கூடும்.

அப்படி இருக்க இந்த வார லட்சுரி பட்ஜெட்டிற்கு தேவையான பொருட்களை பிக் பாஸ் போட்டியாளர் கொண்டிருக்கும்போது திடீரென்று அபிஷேக் ராஜா வருகை தந்தது சக போட்டியாளர்களை அதிர்ச்சி உறைய வைத்தது. அத்துடன் பாவனி மற்றும் பிரியங்கா இருவரும் தலை கால் புரியாமல் கண்ணீர் விட்டு அபிஷேக் ராஜாவின் எதிர்பாராத வருகையால் பரவசமடைந்தனர்.

குறிப்பாக பிரியங்கா அபிஷேக் ராஜா வந்த சந்தோசத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று அஞ்சலி பாப்பா போலவே அபிஷேக் பயன்படுத்தி கப், வாட்டர் கேன் போன்றவற்றை அவருடைய ஞாபகமாக வைத்திருந்த பொருட்களையெல்லாம் வரிசையாக எடுத்துக் கொடுத்து தன்னுடைய ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் பிரியங்காவிற்கு இனிதான் ராகுகாலம் ஆரம்பிக்க போகிறது என்று தெரியாமல் இவ்வாறு நடந்து கொள்கிறார்.

அதைப்போன்று ஒருசில போட்டியாளர்கள் அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள் என்று யோசித்ததாகவும், நேற்றைய நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் இடம் பகிர்ந்து கொண்டனர்.

எனவே அபிஷேக் ராஜா ஏற்கனவே பிரியங்கா மற்றும் நிரூப் உடன் சேர்ந்து கூட்டணி அமைத்து அவர்களுடைய முடிவைத்தான் மற்ற போட்டியாளர்கள் கேட்கவேண்டும் என்று பிக்பாஸ் ஆட்டத்தை வேறொரு கோணத்தில் ஆடினார். எனவே மீண்டும் அவ்வாறு நடந்து கொள்வாரா? இல்லை தன்னுடைய ஆட்டத்தை அமைதியாக ஆடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News