தமிழ் திரையுலக முன்னணி மாஸ் ஹீரோக்களில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் தளபதி விஜய். அவரது 65வது படமான பீஸ்ட் பர்ஸ்ட் லுக் வெளிவந்த சிலமணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் அன்றைய டிரண்டிங்காக மாறியது எல்லோரும் அறிந்ததே.
பீஸ்ட் படப்பிடிப்பு முடிவதற்கு தயாராக இருக்கும் நிலையில் தளபதியின் அடுத்த படமான தலைப்பிடப்படாத ரசிகர்களால் “தளபதி-66” என்று கூறப்படும் புராஜக்ட் பற்றி பேச்சு கோடம்பாக்கம் வட்டாரத்தில் கசிந்து வருகிறது.
தெலுங்கு முன்னணி இயக்குனர்களில் ஒருவரான “வம்ஷி பைடிபைலி” தளபதி விஜய்யை வைத்து இயக்கும் படம் தான் தளபதி66. அதற்கு தயாரிக்க ஒரு பெரிய நிறுவனம் தானாக முன்வந்ததாம்.

அதை தொடர்ந்து படத்தின் மதிப்பு சுமார் 200 கோடிகளுக்கும் அதிகமான பொருளாதார செலவில் உருவாக்க இருப்பதாகவும் நம்பத்தகுந்து வட்டாரங்களிடமிருந்து வட்டமிட்டு வந்த செய்தி. அதில் விஜய் சம்பளமே நூறு கோடியை தொடுமாம்.