வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

திரும்ப அந்த பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன்.. சசிகுமார் எடுத்திருக்கும் அதிரடி முடிவு

இயக்குனராக அறிமுகமான பிரபலங்கள் அதன்பின் படங்களில் நடிக்கத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மாறியுள்ளனர். அந்தவகையில் எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி வரிசையில் சசிகுமாரும் தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதாவது சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சசிகுமார். மேலும் சுப்ரமணியபுரம் படத்திலேயே சசிகுமாரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதன்பிறகு இவர் நடித்த நாடோடிகள் படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

இதைதொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டி புலி, கிடாரி, உடன்பிறப்பே போன்ற படங்கள் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சசிகுமார் மீண்டும் படத்தை இயக்குவதில் சற்று தயக்கம் காட்டிவருகிறார். இப்போது சசிகுமாருக்கு பணப் பிரச்சனை இருக்கிறது.

இதனால் நிறைய படங்களில் நடித்து அந்த கடனை அடைக்க போராடிக் கொண்டிருக்கிறார். இதனால் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சசிகுமார் கைவசம் தற்போது ஐந்தாறு படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா படம் வெளியானது.

மேலும் ஹேமந்த் குமார் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள காரி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர சாதாரண மனிதன், பகைவனுக்கு அருள்வாய், காமன்மேன், நா நா என பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது.

இதனால் தற்போதைக்கு சசிகுமார் மீண்டும் படங்களை இயக்குவது சாத்தியமில்லாமல் உள்ளது. மேலும் சசிகுமாரின் படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதால் தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்தலாம் என்ற முடிவை சசிகுமார் எடுத்துள்ளாராம்.

Trending News