திரிஷா சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் மேலாகியும் தற்போது வரை கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். மேலும் அதே இளமையுடனும் பொலிவுடனும் காட்சியளிக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.
ஆனால் தற்போது இது தவிர அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார். மேலும், மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த வெளியான கொடி படத்தில் திரிஷா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரிஷா இதுபோன்ற கொடூர வில்லி கதாபாத்திரத்தில் இதற்கு முன்னதாக நடித்ததில்லை. அதாவது அரசியல் பதவி வெறியால் தனது காதலன் தனுஷை கொலை செய்துவிடுவார்.
தற்போது திரிஷாவின் அந்த அரசியல் ஆசை நிறைவேற போகிறது. திரிஷா கூடிய விரைவில் காங்கிரஸில் இணையுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. திரிஷாவிற்கு அரசியல் ஆசை வருவதற்கு காரணம் இவர்தான் என்று கூறுகிறார்கள் .
அதாவது குஷ்புவும் முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இணைந்திருந்தார். அதன்பிறகு திமுகவில் இணைந்தார். இதை தொடர்ந்து பல கட்சிகள் தாவி தற்போது பிஜேபியில் இணைந்துள்ளார். மிக விரைவில் குஷ்புக்கு உயரிய பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைப்போல் நடிகை ரோஜாவும் அரசியலில் இறங்கி தற்போது அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார். இதனால் திரிஷாவும் இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் இருப்பதால் நமக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் நாமும் அரசியலில் இறங்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.