80களில் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என சிறப்புப் பெயருடன் ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகர்தான் நடிகர் அர்ஜுன். தற்போது உச்ச நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆக்சன் கிங் அர்ஜுன் இவர்கள் இருவரும் இணைந்து படம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தனது திறமையை மட்டும் நம்பி படிப்படியாக நம் கண்முன் வளர்ந்து வந்த ஒரு திறமையான நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அசத்தப்போவது யாரு, மானாட மயிலாட போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி இதன் மூலம் திரையுலகிற்கு வந்தவர்.
அவரது முதல் படம் நீ தானே அவன். அதன்பின் அட்டகத்தி, ரம்மி, திருடன் போலீஸ், காக்காமுட்டை, ஹலோ நான் பேய் பேசுறேன், கட்டப்பாவ காணோம், வடசென்னை, கனா போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதைவிட வடசென்னை படத்தில் இவர் பேசிய கெட்ட வார்த்தையில் இன்னும் புகழ் பெற்றார்.
இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி ஜோமோன்ட் சுவிசேஷங்கள், ஜானகி போன்ற மலையாள படங்களிலும் மற்றும் ரம்பன்டு, கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி, டக் ஜெகதீஷ்போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பின் டாடி என்னும் ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது தினேஷ் லக்ஷ்மணன் இயக்கவுள்ள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் இவர்கள் இருவரும் நடிக்க கமிட்டாகி உள்ளனர். இந்தப்படத்தின் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளியில் ஆசிரியராக பணி புரிவதாகவும் மற்றும் அர்ஜுன் (இன்வெஸ்டிகேஷன் ஆபீசர்) விசாரணை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அத்துடன் இந்தப் படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் ஆக்ஷனை விட தனது புத்திசாலித்தனத்தை மையமாகக்கொண்டு நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.