செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கொடூரமாக நடிக்கும் அர்ஜுன்.. இணையத்தில் லீக் ஆன லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 60% வேலைகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவித்திருந்தது. இந்தப் பாடலுக்கான ரிகர்சல் நடந்து வரும் நிலையில் விரைவில் இந்தப் பாடலின் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. மேலும் சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன.

விஜய், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வரும் இந்த லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஜம்மு காஷ்மீர் சென்றிருந்த நிலையில் அங்கு காட்சிகள் படமாக்கப்பட்ட விதத்தை பதிவு செய்து, வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது லியோ.

Also Read:விஜய்யை வெறுத்து ஒதுக்கிய முக்கிய இயக்குனர்கள்.. நல்லவேளை என் பையன நானே ஹீரோவா காப்பாத்திட்டேன்

தற்போது சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ரொம்பவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னை அடுத்த பையனூரில் கொளுத்தும் வெயிலிலும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதன் பின்னர் ஸ்டூடியோவில் செட் அமைக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில், லியோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

லியோ படத்தில் முதன் முதலில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. பின்னர் அவர் நடிக்கவில்லை என்பது போன்ற வதந்திகளும் வந்தன. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் ஆக்சன் கிங் இணைய இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இவருக்கு கேரக்டர் டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய செய்திகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read:விஜய் கேட்ட கேள்வியால் வேதனையில் பிரபல நடிகர்.. இப்ப வரை ஆறுதலாக இருக்கும் அஜித்

லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பித்த நேரத்திலேயே, இந்த படத்தின் கதை பிரபல ஹாலிவுட் படமான ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ கதையை தழுவியது என்று தகவல்கள் வெளியானது. இதற்கிடையில் தற்போது அர்ஜுன் ஷூட்டிங்கில் இணையவிருக்கும் நேரத்தில் அவர் அந்த ஹாலிவுட் படத்தில் நடிகர் ஹெட் ஹாரிஸ் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் புகைப்படம்

Arjun & Ed Harris

‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஹெட் ஹாரிஸ் ‘கால் போகர்டி’ என்னும் பெயரில் மிக கொடூரமான வில்லனாக நடித்திருப்பார். அதே கேரக்டரை அர்ஜுன் தன்னுடைய வில்லத்தனத்தில் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஆக்சன் கிங் அர்ஜுன் லியோ படப்பிடிப்பில் இன்று முதல் இணைவது மற்றும் உறுதியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Also Read:எவ்வளவு பட்டும் திருந்தாத விஜய்.. பாலகிருஷ்ணாவை தொடர்ந்து மாட்டிய தளபதி – 68

 

Trending News