வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மன்சூர் அலிகான் செய்த காரியத்தால் லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. லியோவில் நடிக்க வைத்து தான் பெரிய தவறு

Lokesh and Mansoor Alikhan: ஒரு காலத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக பல படங்களில் நடித்து வந்தாலும் இவருடைய நடிப்புக்கு நிறைய ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். அதில் ஒருவராக தான் லோகேஷ் தீவிர ரசிகராக இருந்தார். அதனாலயே லியோ படத்தில் மன்சூர் அலிக்கானுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார். அதற்கு ஏற்ற மாதிரி மன்சூரும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக நடித்துக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து கொஞ்ச கொஞ்சமா மன்சூர்க்கு மறுபடியும் பட வாய்ப்புகள் வரும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது இவருடைய தேவையில்லாத பேச்சால் பல சர்ச்சைகள் உருவாகி வருகிறது. அதாவது த்ரிஷாவை கொச்சைப்படுத்தும் விதமாக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசி இருக்கிறார்.

இது தற்போது பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. அத்துடன் த்ரிஷா, மன்சூருக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக இவர் எல்லாம் என்ன ஜென்மம், இப்படிப்பட்டவர்களால் தான் மனித இனத்திற்கே அவமானம் என்று ஒட்டுமொத்த கோபத்தையும் கொட்டி தீர்த்து இருக்கிறார். அத்துடன் இனிமேல் இவருடன் எந்த சூழ்நிலையிலும் நடிக்கவே மாட்டேன்.

Also read: த்ரிஷாவை வைத்து கேவலமாக பேசிய மன்சூர் அலிகான்.. லோகேஷ் போட்ட பதிவால் ஆடி போன கோலிவுட்

இவர் நடிக்கும் படங்களில் ஒரு சில காட்சிகள் இருந்தால் கூட அதில் நான் நடிக்க விரும்பவில்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி லோகேஷும், மன்சூர் அலிகான் பேசியது முற்றிலும் தவறு. சக கலைஞர்களை மதிக்க தெரிய வேண்டும். அதிலும் பெண்கள் பெயரை பயன்படுத்தி அவதூறாக பேசுவது நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அத்துடன் நான் இனி எடுக்கக்கூடிய படங்களில் மன்சூர் அலிகானுக்கு எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இப்படி லோகேஷ் சொல்லுவார் என்று கொஞ்சம் கூட மன்சூர் அலிகான் எதிர்பார்த்து இருக்க மாட்டார். ஏனென்றால் நம்முடைய தீவிர ரசிகர் தான் லோகேஷ் என்ற ஒரு கர்வத்தில் இருந்தார்.

ஆனால் தற்போது இவர் பேசியது லோகேஷுக்கு பிடிக்காததால் முற்றிலுமாக மன்சூருக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஏற்கனவே பட வாய்ப்பு இல்லாமல் இருந்த மன்சூர் அலிகானுக்கு லியோ படத்தின் மூலம் தான் கொஞ்சம் வாய்ப்பு வர ஆரம்பித்தது. அதை சரியாக பயன்படுத்தத் தெரியாமல் தேவையில்லாத பேச்சால் கேரியரை கெடுத்துக் கொண்டார்.

Also read: விஜய்யுடன் சில்லுன்னு ரொமான்ஸ் செய்யும் த்ரிஷா.. லியோ 3ம் பாடல் உயிர் பாதி உனக்கே எப்படி இருக்கு?

Trending News