தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக தனக்கென ஒரு இடம் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நடிகர் ஆதி எப்படியாவது ஏதாவது ஒரு மொழியிலாவது தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிகர் ஆதி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் வில்லன் வேடங்கள் தான் கிடைத்து வருகிறது.
தமிழிலும் அவர் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்தன. இருந்தாலும் மரகதநாணயம் என்ற படம் வெற்றிப்படமாக அமைந்ததால் இவரது படங்களுக்கு ஓரளவு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
சின்ன எதிர்பார்ப்பு இருந்தாலும் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என தற்போது தமிழில் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்ற தேன் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளாராம்.
ஆர்யாவின் முன்னாள் காதலி அபர்ணதி நடிப்பில் வெளியான திரைப்படம் தேன். இந்த படத்திற்கு நல்லதொரு விமர்சனம் கிடைத்தது. ஆனால் வசூல் செய்யவில்லை. இந்த படத்தைதான் தெலுங்கில் ரீமேக் செய்ய ஆசைப்படுகிறார் ஆதி.
கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு சினிமாவில் நல்ல கதையுடன் வெளியாகும் படங்கள் வெற்றியை பெற்று வருவதாகவும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொள்ள தற்போது தெலுங்கு சினிமாவை நம்பி தேனை கொண்டு செல்கிறார். தேன் கெட்டுப் போகாமல் இருந்தால் சரி என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.