வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்துள்ள அஜீத்.. நீங்க பலதடவ பார்த்த அந்த படம்தான்

தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டவர் நடிகர் அரவிந்த்சாமி. சூப்பர் ஸ்டாரின் தளபதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் இதுவரை ஏராளமான திரைபடங்களில் நடித்துள்ளார்.

சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரேவதி, ரகுவரன் ஆகியோர் நடித்த திரைப்படம் பாசமலர்கள். இந்த திரைப்படத்தில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அமராவதி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த அஜித் பல வருடங்களுக்குப் பிறகு பாசமலர்கள் என்ற இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுவரை சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த அவருக்கு இந்த படத்திற்கு பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது.

தற்போது ஒரு பேட்டியில் அரவிந்த்சாமியிடம் நீங்கள் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் மீண்டும் ஒரு நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த அரவிந்த்சாமி நீண்ட இடைவேளைக்கு பிறகு தனி ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக என்ட்ரி கொடுத்தார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவர் பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

ஐம்பது வயதை கடந்த பிறகும் இன்னும் திரைப்படங்களில் ஹீரோவாக, இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News