வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விடாமுயற்சிக்கு செட் ஆகாத கூட்டணி.. மகிழ்,நிரவ்,அஜித் முக்கோண பிரச்சனையில் படும் பாடு

Actor ajith angry to magizh thirumeni for vidaamuyarchi shooting delay: கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பது யாருக்கு பொருந்துதோ இல்லையோ கொள்கை சிங்கம் தல அஜித்திற்கு பொருத்தமான ஒன்றுதான். தனது படங்களில் நடிப்பதை மட்டுமே வேலையாக வைத்து அது தவிர பிரோமோஷன் என எந்த ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி ரசிகர்களை ஏமாற்றாமல், படம் புடிச்சா பாருங்க! என்று கூலாக சொல்லிவிடும் அஜித்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏன் பிடிக்காமல் போகாது.

கடந்த ஆண்டு வெளியான துணிவின் வெற்றியில் மகிழ்ந்த அஜித் அவர்கள் ஏகே 62க்கு ரெடியானார். நீடித்த இழுபறிக்கு பின் லைக்கா தயாரிப்பில் மகிழ்ந்திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி ஆரம்பம் ஆனது. அனிருத் இசை அமைக்க, ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா இக்கூட்டணியுடன் இணைந்தார்.

அஜித்திற்கு ஒருவரை பிடித்து விட்டாலோ அல்லது மற்றவருக்கு அஜித்தை பிடித்தாலோ அந்தக் கூட்டணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். பிடித்தவர்களை விட்டுக் கொடுக்காதது அஜித்தின் பலம். உதாரணமாக அஜித்தின் இயக்குனர்கள் சிறுத்தை சிவா, ஹச் வினோத் போன்றோர் திரும்பத் திரும்ப அவரை வைத்து இயக்குவதையே வழக்கமாகி கொண்டனர்.

Also read: விளம்பரம் பிடிக்காத அஜித் தினமும் ஒரு போட்டோ வெளியிடுவது ஏன் தெரியுமா.?

அதேபோல்தான் வலிமை படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா அவர்களை விடாமுயற்சி படத்திற்காக அஜித் சிபாரிசு செய்ததன் மூலம் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா ஒப்பந்தமானார். இப்போது உள்ள பிரச்சனை என்னவென்றால் இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் ஆக்சன், திரில்லர் ஸ்டோரியை தனக்கு திருப்திப்படும் விதமாக படத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வருகிறார்.

ஆனால் இந்த கான்செப்ட் அஜித்திற்கும், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவுக்கும் ஒத்துவரவில்லை. “கவுண்டமணி ஆறு மணிக்கு மேல எவ்வளவு காசு கொடுத்தாலும் ஒர்க் பண்ண மாட்டேன்னு சொல்ற மாதிரி”, குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இழுத்தடிக்காமல், டேக் ஓகேன்னா முடிச்சுட்டு போறது என கொள்கை பிடிப்பு கொண்ட அஜித்திற்கு, ரீடேக் வாங்கும் மகிழ்திருமேனி செட்டாகாமல் பாடாய்படுத்துவதாக தகவல்.

இயக்குனரின் விருப்பத்திற்கு இணங்கி ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாக்கு பதிலாக, ஓம் பிரகாஷ் என மாற்றிவிட்ட போதும் விடாமுயற்சி காலதாமதம் ஆகிக்கொண்டே செல்கிறதாம். எதிர்பார்த்த அளவு விடாமுயற்சி ரிலீஸ் ஆவது சிக்கலில் உள்ளது. இதனால் அஜித், திரிஷா போன்றோர் அடுத்தடுத்த படங்களில் தன் கவனத்தை செலுத்த முடியாதவாறு  நொந்து நூடுல்ஸ் ஆகி உள்ளனர்.

Also read: கோடி கொடுத்தாலும் இந்த கேரக்டர்ல அஜித் கூட நடிக்க மாட்டேன்.. வீம்பு பண்ணும் விஜய் சேதுபதி

Trending News