Actor Ajith Latest Photos: இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு விஜய், அஜித் இருவரும் வாரிசு, துணிவு படத்தின் மூலம் திரையரங்குகளில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இந்த நிலையில் வாரிசு படத்திற்கு பிறகு விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தளபதி 68 படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அஜித்தின் போட்டி நடிகராக பார்க்கப்படும் விஜய் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அஜித் தனது அடுத்த படமான விடாமுயற்சி பற்றி எந்த கவலையும் இல்லாமல் சைக்கிளில் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
Also Read: பிரமிக்க வைக்கும் அஜித்தின் சொத்து மதிப்பு.. ஆடம்பரமான பைக், கார், ஜெட் விமானம் வாங்கிய ஏகே
இதில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் பள்ளி குழந்தைகளும் அவருடன் சேர்ந்து ஜாலியாக சைக்கிளிங் செய்கின்றனர். இதெல்லாம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் விடா முயற்சி படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாகவே துவங்கப்படாமல் இழுத்தடித்து வந்ததால் படத்தை படக்குழு கைவிட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது விடாமுயற்சி கண்டிப்பாக உருவாகும் என்று உறுதி அளித்தார்.
சைக்கிளில் ஜாலியாக ஊர் சுற்றும் அஜித்

Also Read: அஜித் அன்றைக்கு சொன்ன தெய்வ வாக்கு, இப்ப பழித்துவிட்டது.. தலையில் தூக்கிக் கொண்டாடும் வில்லன் நடிகர்
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெளிநாட்டில் பைக் சுற்றுலா சென்ற அஜித் அண்மையில் சென்னை திரும்பினார். சென்னை திரும்பியதும் விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது அஜித் மனைவியுடன் ஜாலியாக சைக்கிளிங் செய்து கொண்டிருக்கிறார்.
‘அவருக்கு விடாமுயற்சி பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை, தன்னுடைய வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்’ என தல ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து தெறிக்க விடுகின்றனர்.
மனைவியுடன் ஜாலியாக சைக்கிளிங் செய்த அஜித்

Also Read: வாரிசு நடிகையாக இருந்தாலும் விட மாட்டாங்க!. அஜித் பட இயக்குனரின் மகள் கூறிய அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை