Actor Ajith latest viral photos: அஜித் இப்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை எப்போதே முடித்திருக்க வேண்டும், ஆனா மாத கணக்கில் இழுத்து விட்டனர். அதனாலயே படக்குழு இப்போது ஷூட்டிங்கை விரைந்து முடிக்க பார்க்கின்றனர்.
இந்த நிலையில் அஜித்தின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரையாகிக் கொண்டிருக்கிறது. இதில் அஜித் 15 கிலோ உடல் எடையை அதிரடியாக குறைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அஜித்துக்கு உடல் எடையை ஏற்றுவது, குறைப்பதெல்லாம் ஒரு விசயமே கிடையாது. ஒரு படத்தின் ஷூட்டிங் துவங்கப் போகிறது என்றால் அப்படியே டோட்டலாக மாறி விடுவார்.
அப்படிதான் விடாமுயற்சி படத்திற்காகவும் அஜித் செம ஸ்லிம்மாக மாறி ஹேண்ட்ஸம் லுக்கில் உள்ளார். இந்த முறை அஜித் உடற்பயிற்சியோடு சேர்த்து அவருடைய உணவு பழக்கத்தையும் மாற்றி இருக்கிறார். அஜித் இப்போதெல்லாம் அசைவம் சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்திவிட்டார். வெறும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கிறார்.
Also Read: விஜயகாந்தின் இறுதி அஞ்சலியில் பங்கேற்காத பிரபலங்கள்.. நச்சுன்னு பேசிய பிரேமலதா
அஜித்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்
ஸ்லிம்மாக மாறிய அஜித்
![ajith-new-look-cinemapettai](https://tech.cinemapettai.com/wp-content/uploads/2024/01/ajith-new-look-cinemapettai.webp)
இனிமே இதையே ஃபாலோ பண்ணி, தொடர்ந்து ஸ்லிம்மாக இருக்கப் போவதாகவும் முடிவு எடுத்திருக்கிறார். மேலும் அஜித் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டில் உள்ளார். அங்கிருந்துதான் அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகிறது.
15 கிலோ உடல் எடையை குறைத்த அஜித்
![ajith-latest-photo-cinemapettai](https://tech.cinemapettai.com/wp-content/uploads/2024/01/ajith-latest-photo-cinemapettai.webp)
இரவு நேரங்களில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் மக்களோடு மக்களாக அஜித் ஹாப்பியாக இருப்பது தெரிகிறது. அதோடு பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் உடனும் அஜித் இருக்கும் புகைப்படமும் வெளியாகிறது. அப்படி என்றால் விடாமுயற்சி படத்தில் ஆரவ் அஜித்துடன் இணைந்து நடிப்பது தெரியவந்துள்ளது.
அதோடு அஜித் ஸ்மார்ட்டாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து டாப் இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் தன் பக்கம் இழுக்கிறார். இது போன்ற ஸ்டில்ல காட்டுவதும் தான் அவருடைய வெறித்தனமான ரசிகர்களுக்கும் லைஃப் டைம் செட்டில்மெண்ட் ஆக இருக்கிறது.
அஜித் உடனும் ஆரவ்இருக்கும் புகைப்படம்
![ajith-arav-cinemapettai](https://tech.cinemapettai.com/wp-content/uploads/2024/01/ajith-arav-cinemapettai.webp)