புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அடுத்தடுத்து 3 வருஷத்துக்கு ஐந்து இயக்குனர்களை லாக் செய்த அஜித்.. தனுஷ் காத்திருக்க ஏகே செய்த வேலை

Actor Ajith upcoming projects: பழகுவதற்கு இனிய அஜித் என்னதான் மேஜிக் செய்வாரோ அவருடன் இணைந்த இயக்குனர்கள் மீண்டும் மீண்டும் அடுத்த படங்களில் அவருடன் கூட்டணி சேரவே விரும்புகின்றனர். உதாரணமாக சிறுத்தை சிவாவுடன் வேதாளம், விவேகம், விசுவாசம், வினோத் உடன் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இப்போது பார்முலா 1 கார் பந்தய வீரர் இந்த பார்முலாவை கொஞ்சம் மாற்றிப் தனது அடுத்தடுத்த படங்களில் ஒரே இயக்குனராக அல்லாமல்  முற்றிலும் மாறுபட்ட சிந்தனை கொண்ட 5  இயக்குனரிடம் கால்ஷீட் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

AK 62: ஹச் வினோத்தின் துணிவிற்கு பின் தடம் பதித்த இயக்குனர் மகிழ்திருமேனியுடன் விடாமுயற்சியில் இணைந்துள்ளார். வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் த்ரில்லர் உடன் கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

AK 63: விடாமுயற்சிக்கு பின் மார்க் ஆண்டனி புகழ் இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் தனது அடுத்த படத்திற்கான ஒப்பந்தத்தை போட்டுள்ளார். ஏற்கனவே ஆதிக் அஜித்தின் தீவிர ரசிகராம். கரும்பு தின்ன கூலி கேட்கவா வேண்டும் தரமான சம்பவத்திற்கு ரெடியாகி வருகிறார் ஆதிக். அஜித் அவர்கள் இதற்காக தொடர்ந்து 70 நாட்கள்  கால்சீட் கொடுத்துள்ளார் என தகவல்கள் வந்துள்ளது.

Also read:அஜித்துடன் படம் பண்ண போட்டி போடும் 5 இயக்குனர்கள்.. மீண்டும் விக்னேஷ் சிவன் போட்ட அப்ளிகேஷன்

AK 64:  வெற்றிமாறன் தனது படத்தில் ஹீரோயிசத்தை கொஞ்சம் தூக்கலாக வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக கருத்துக்களையும் மனதில் விதைத்து விடுவார். ஆர் எஸ் இன்ஃபோடைமென்ட் தயாரிப்பில் AK 64 காக வெற்றிமாறன் மற்றும் அஜித் கூட்டணி கைகோர்க்கும் என இணையத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது. செய்தியை கேட்டு கடுப்பான சிலரோ இது நடக்காது என்பது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே வெற்றிமாறனுக்காக தனுஷ் காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் அஜித் அவரை கொக்கி போட்டு தூக்கி உள்ளார்

AK 65: ரசிகர்கள் மறக்க முடியாத வண்ணம் பில்லாவில் அஜித்தை மாஸ் ஆக காட்டியிருப்பார் விஷ்ணுவர்தன். அஜித்துடன்ஆரம்பத்திற்கு பின் தற்போது AK65 இல் இணைகிறார் விஷ்ணுவர்தன்.  பில்லாவைப் போன்று இதுவும் ரஜினியின் பாட்ஷா ரீமேக்காக இருக்குமா? அல்லது தஞ்சை சார்ந்து எடுக்கப்பட்ட வரலாற்று படமாக இருக்குமா? என்பது அறியாத செய்தி.

AK 66: உலக அளவில் வசூலில் 1௦௦௦ கோடியை தாண்டி வசூலில் சாதனை புரிந்த ஜவான் படத்தின் வெற்றி இயக்குனர் அட்லி அவர்கள், அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருக்காக ஒரு பயங்கரமான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வைத்திருக்கிறேன் அவர் ஓகே சொன்னா படம் பண்ணிடலாம் என்று அவர் சொன்ன நேரம் பலித்து விட்டது. ஆம் AK 66  அட்லி கான இடம் என ஒதுக்கி வைத்துள்ளார் அஜித். ஆபீஸியலா எந்த ஒரு அனௌன்ஸ்மென்டும் வராத நிலையில் AK 66 பேச்சுவார்த்தையில் உள்ளது.

அடுத்தடுத்து என்னவோ அஜித் ரசிகர்களுக்கு விருந்து பல காத்திருக்கிறது.

Also read: தமிழ் புத்தாண்டுக்கு வசூல் வேட்டையாட வரும் 5 படங்கள்.. அஜித், விஜய்க்கு பயத்தை காட்டும் படம்

Trending News