திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விளம்பரம் பிடிக்காத அஜித் தினமும் ஒரு போட்டோ வெளியிடுவது ஏன் தெரியுமா.?

Actor Ajith vidamuyarchi update and posted his photos to social media: மக்களே நாம வாங்குற அஞ்சு பத்து காசுக்கு விளம்பரம் தேவை இல்ல தான் ஆனா நம்ம தல அப்படியா அவரோட ரேஞ்ச் என்ன? அவரோட ஸ்பெஷாலிட்டி என்ன? தற்போது தினம் ஒரு தகவலாக அஜித் அவர்கள் தனது புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவிட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

மகிழ்த்திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு  தாமதமாக ஆரம்பித்து, இடையில் கொஞ்சம் ஸ்பீடு எடுத்து, தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அஜித்தின் கட்டளையின்படி விடாமுயற்சியின் எந்த ஒரு அப்டேட்டும் லீக் ஆகாமல் கதையை கச்சிதமாக நிறைவு செய்தனர் பட குழுவினர்.

தற்போது ஏகே 63 காக அஜித் அவர்கள் மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைய உள்ளார். படத்திற்கான பூஜை போடப்பட்டு சைலன்டாக ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கேப்பில் அஜித் அவர்கள் தனது வெளிநாட்டு பயணங்களுடன் அதில் எடுக்கும் புகைப்படங்களை தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் போட்டோஸ் கூட இல்ல இது நார்மல் போட்டோ தான் என்றாலும் அஜித் என்ற பிராண்டிற்காகவே ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள். நம்ம தல அஜீத்க்கு விளம்பரம் பிடிக்காது எளிமையே வலிமையாக கொண்டு முன்னேற்றத்தை மூச்சன கொண்டிருக்கும் அஜித், ஏன் இவ்வாறு செய்கிறார் என்ற கேள்வி சினிமா ஆர்வலர்கள் பலருக்கும் எழும்பி உள்ளது.

Also read: AK 63-இல் நடிக்க போட்டியிடும் 3 முக்கிய வில்லன்கள்.. அஜித்தின் டார்லிங்க்கு அதிக வாய்ப்பு

அதாவது தமிழ் சினிமாவின் தனது இணை ஆளுமை விஜய் அவர்கள் கட்சி, சினிமா இரண்டையும் ஈக்குவலாக பேலன்ஸ் பண்ணி முன்னேறி வருகிறார். தினமும் அவர் பற்றிய செய்தி சுட சுட வந்துக் கொண்டிருக்கிறது. தானும் ட்ரெண்டிங்கில் இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்று யோசித்தாரோ என்னவோ? இப்படி புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் வருகிறார் நம்ம தல. விஜய் பெருசா திங்க் பண்றார் அஜித் சிம்பிளா திங்க் பண்ணி வருகிறார். ஸ்மார்ட் வொர்க் பண்றாராமா?

அது மட்டுமா ஏகே63 காக ஒர்க்கவுட் பண்ணி தனது உடல் எடையையும் குறைத்து உள்ளார் என்பது கூடுதல் தகவல். இறுதியாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அஜித்தின் விடா முயற்சி, அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: கோடி கொடுத்தாலும் இந்த கேரக்டர்ல அஜித் கூட நடிக்க மாட்டேன்.. வீம்பு பண்ணும் விஜய் சேதுபதி

Trending News