திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கடுக்கன், கூலிங்கிளாஸ் உடன் மாஸ் லுக்கில் அஜித்.. ஏகே 61 சம்பவத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏ கே 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் முந்தைய திரைப்படங்களை இயக்கிய பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் இந்தத் திரைப்படத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

மஞ்சு வாரியர், சமுத்திரகனி இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பேங்கில் நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால் இந்த படத்தில் அஜீத் தன்னுடைய உடல் எடையை குறைத்து நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதேபோல் அஜித்தும் உடல் எடையை குறைப்பதற்காக கேரளா சென்று சில ஆயுர்வேத சிகிச்சைகளையும் மேற்கொண்டார்.

தற்போது அதன் பலனாக அஜித் தன்னுடைய உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து இருக்கிறார். அவரின் தற்போதைய லேட்டஸ்ட் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் பரவி வைரலாகி வருகிறது. அதில் அஜித் வெள்ளை நிற சட்டையில் தாடியுடன் அம்சமாக இருக்கிறார்.

ajith
ajith

மேலும் காதில் கடுக்கன், கூலிங்கிளாஸ் என்று கலக்கலாக இருக்கும் அவரை பார்த்த ரசிகர்கள் அவருடன் இணைந்து ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அஜித் ரசிகர்களுடன் இருக்கும் அந்த போட்டோ தான் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அஜித் பெரிய நடிகர் என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் தன் ரசிகர்களுடன் இயல்பாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகிறார். ரசிகர்கள் அவரை பிரமிப்பாக பார்க்கும் புகைப்படங்கள் தான் தற்போது ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

Trending News