வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இனி யாரும் என்னை தல என்று அழைக்க வேண்டாம்.. நடிகர் அஜீத் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது தயாரிப்பாளர் போனிகபூரின் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் அஜித் ஊடகங்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் அஜித், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீனா என்ற திரைப்படத்தில் 2001 ஆம் ஆண்டு நடித்தார். இந்த திரைப்படத்தில் அஜித்தின் கேரக்டர் தல என்று அழைக்கப்படும்.

மிகப்பெரிய வெற்றி பெற்ற தீனா திரைப்படத்திற்குப் பிறகு அஜித்தின் ரசிகர்கள் அவரை தல என்று அழைக்கத் தொடங்கினர். அதன் பிறகு அஜித் குமார் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தல என்ற அடைமொழியோடு குறிப்பிடப்பட்டது. தற்போது அஜித்தை பற்றி எந்த தகவல்கள் வந்தாலும் தல என்று குறிப்பிட்டு வெளியாகி வருகிறது.

இது தொடர்பாக நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரும் மரியாதைக்குரிய ஊடாக, பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், மன அமைதி, மனநிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நடிகர் அஜீத்தின் மேனேஜர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியால் தற்போது அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் மற்றும் அஜீத்தின் ரசிகர்கள் தல, தளபதி என்ற பெயரில் பல ஹேஸ்டேக்குகள் உருவாக்கி டிரண்ட் செய்து வருவது வழக்கம். தற்போது நடிகர் அஜித் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Trending News