கடந்த சில மாதங்களாகவே பிரபலமான நடிகர் ஒருவர் கண்ணில் பார்க்கும் இளம் நடிகைகள் மற்றும் மூத்த நடிகைகள் என பாரபட்சம் பார்க்காமல் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உல்லாசமாக இருந்து வருகிறாராம்.
சமீபத்தில் வந்த கொரோனாவால் இயற்கை எய்தியவர்தான் அந்த சினிமா பிரபலம். இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளது. மேலும் சென்னையில் பல நில புலங்களை வாங்கி குவித்து வைத்துள்ளார். கஷ்டப்பட்டு அந்த மனிதன் சம்பாதித்த அனைத்தையும் அந்த பிரபலத்தின் மகனான அந்த நடிகர் சமீப காலமாக என்னேரமும் குடி கூத்து என ஹோட்டலிலேயே கூடியிருந்து வருகிறாராம்.
எப்போது பார்த்தாலும் அவரைச் சுற்றி இளம் பெண்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட இளம் நடிகையின் மீது அவருக்கு தனி பாசம் வந்து விட்டது என்கிறார்கள்.
சமீபத்தில் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருந்த அந்த நடிகரை எதார்த்தமாக பார்க்க வந்த இளம் நடிகையை எப்படியாவது வளைத்துப் போட்டு விட வேண்டும் என முடிவு செய்து அதில் வெற்றியும் கண்டார் அந்த நடிகர். தற்போது அந்த இளம் நடிகை அந்த நடிகரின் கைவசம் உள்ளாராம்.
வார இறுதியில் இருவரும் பாண்டிச்சேரியில் ஒரு தனி ரிசார்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்து சகலமும் சௌகரியமாக இருந்து வருகிறார்களாம். மேலும் அந்த இளம் நடிகைக்கு கோடிக்கணக்கில் பணமும் நகையுமாக அள்ளி வீசி வருகிறாராம்.
இதனை பார்த்த அந்த இறந்துபோன பிரபலத்தின் நண்பர்கள், அப்பா ஒவ்வொரு பைசாவாக கஷ்டப்பட்டு சேர்த்ததை பையன் இப்படி அநியாயத்திற்கு அழிக்கிறானே என கவலைப்படுகிறார்களாம். அந்த ஹீரோவோ, வாழ்ற வரை சந்தோசமா வாழ்ந்துட்டு போயிட்டே இருக்கணும் என பெருசுகளுக்கு அட்வைஸ் கூறி வருகிறாராம்.