புதன்கிழமை, ஜனவரி 22, 2025

40 வயது நடிகரை கண்டாலே தலைதெறிக்க ஓடும் தயாரிப்பாளர்கள்.. கொஞ்ச நாளாவே போக்கு சரியில்லையாம்!

தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி நடிகராக வலம் வந்தவர் சமீபகாலமாக தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டி வருவது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

சின்ன பசங்களை வைத்து வெற்றி கொடுத்த இயக்குனர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அந்த நடிகர். ஆரம்பத்தில் சமர்த்துப் பிள்ளையாக தயாரிப்பாளர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வந்தார்.

சினிமாவைப் பொருத்தவரை மினிமம் கியாரண்டி நடிகர் என்ற கட்டத்தை அடைவது மிகவும் கடினம். ஆனால் அந்த நடிகருக்கு எளிமையாகவே அந்த இடம் கிடைத்தது. அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் முதலுக்கு மோசமில்லை எனுமளவுக்கு படங்கள் ஓடி வந்தன.

ஆனால் சமீபகாலமாக அந்த நடிகர் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் தயாரிப்பாளர்கள் அந்த நடிகருக்கு பல கெடுபடிகள் போட்டுள்ளனர். ஆனால் அவை எதுக்குமே அந்த நடிகர் ஒத்துழைக்கவில்லையாம்.

நீங்க படம் தரலைன்னா என்ன என்று தானே சொந்தமாக ஒரு படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் அந்த படம் தயாரிக்க ஒருவரிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராததால் சமீபத்தில் பிரச்சனையானது குறிப்பிடத்தக்கது.

கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்கு என் பெயரை கெடுக்க பார்க்கிறார்கள் என அப்படியே திருப்பி விட்டு விட்டாராம் அந்த நடிகர். இதன் காரணமாக ஏற்கனவே அந்த நடிகரை வைத்து படம் தயாரிக்க ஒப்புக் கொண்ட பல தயாரிப்பாளர்களுக்கு தற்போது கத்தி மேல் நிற்கும் கதைதான்.

தயாரிப்பாளர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தன்னுடைய மனைவியை முன்னிறுத்தி அரசியலில் நுழைய ஐடியா போட்டுள்ள அந்த நடிகரின் போக்கு சமீபகாலமாக சரியில்லை என தயாரிப்பாளர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்களாம்.

Trending News