புதன்கிழமை, மார்ச் 12, 2025

பிரஷாந்த் கிஷோர் வருகைக்கு பின் விஜய்க்கு கொடுக்கப்படும் நெருக்கடி.. தடம் மாறும் தமிழக வெற்றி கழகம்!

Vijay: அங்க சுத்தி, இங்க சுத்தி என்கிட்ட தான் வரணும் என்ற நிலைமை ஆகிவிட்டது தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் நிலைமை.

தமிழக அரசியலில் புதிய கட்சியை தொடங்கி தலைதூக்கி நின்றவர்கள் என்று இன்றுவரை யாரையும் சொல்ல முடியாது.

விஜய்க்கு கொடுக்கப்படும் நெருக்கடி

கட்சி ஆரம்பிக்கும் போது திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து தான் களமிறங்குவார்கள். அப்படி களம் இறங்கியவர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். கடைசியில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் நிலைமைதான் அவருக்கு வந்தது.

அதே போன்ற ஒரு சூழ்நிலையில் தான் சிக்கி இருக்கிறார் விஜய். பிரசாந்த் கிஷோர் தமிழகத்திற்கு வந்த பிறகு தமிழக வெற்றி கழகத்தின் நிலைமை தலைகீழாகி விட்டது.

தனியாக நின்று ஆட்சியைப் பிடிப்பது என்பது நிறைவேறாத கனவு என்பது தெரிந்து விட்டது.

இதனால் திமுகவை உறுதியாக எதிர்த்து அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய்க்கு கட்சி முக்கிய நிர்வாகிகளால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க இது குறித்து உறுதியான அறிவிப்பும் வெளியாகும்.

Trending News