ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்ப காலி ஆகும்னு இருந்த அருள்நிதி.. உச்சகட்ட ராஜதந்திரம் இதான்

Actor Arulnithi: அமைச்சர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என கடைசி கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து, சமீபத்தில் ரிலீஸ் செய்தார். இனிமேல் படம் நடிக்க போவதில்லை என உதயநிதி முடிவெடுத்தது ஒரு பக்கம் அருள்நிதிக்கு கொண்டாட்டம் தான்.

உதயநிதி, அருள்நிதி இருவரும் நடிக்கும் பொழுதே அருள்நிதியின் நடிப்பு மற்றும் இருவரின் படங்களில் அருள்நிதியின் படமானது தனித்துவமாக இருக்கும். உதயநிதி கடமைக்காக நடித்தவர், ஆனால் அருள்நிதி நடிப்பை பிடித்து நடக்கக் கூடியவர். அதனால் அவரது படங்கள் தற்பொழுது அனைவருக்கும் பிடித்த விதத்தில் அமைந்து வருகிறது.

Also Read: 4 நாட்கள் ஆகியும் போட்ட காசை எடுக்க முடியாமல் திணறும் உதயநிதி.. கடைசி படத்தில் வாங்கிய அடி

உதயநிதி சினிமாவில் இருக்கும் பொழுது அருள்நிதி அமைதியாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். ஆனால் தற்பொழுது உதயநிதி சினிமாவை விட்டு விலகியதும், கொஞ்சம் ஆர்வமாக வேலை பார்த்து வருகிறார் அருள்நிதி. அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்ப காலியாகும் என உதயநிதி இல்லாததை பயன்படுத்திக் கொண்டு தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக வர அருள்நிதி உச்சகட்ட ராஜதந்திரத்தை பயன்படுத்துகிறார்.

ஏனென்றால் இதற்கு முன்பு அருள்நிதி தரமான படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய படங்கள் பெரிய தோல்வியாக அமையாமல் குறைந்தபட்ச வெற்றியை மட்டுமே கொடுத்தது. இவர் படங்களுக்கு பெரிய செலவு இருக்காது. ஆனால் இனிமேல் இவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: குரங்கு கையில பூமாலை கிடைச்ச கதைதான்.. எதையும் சரியாகப் பயன்படுத்தாத மாரி செல்வராஜ்

இதை தனது அண்ணன் உதயநிதியை வைத்து பயன்படுத்திக்கொள்ள ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளார் அருள்நிதி. ஏற்கனவே ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் டாப் நடிகர்களின் படங்களை தயாரித்தும், படங்களை விநியோகம் செய்து கொண்டிருக்கும் உதயநிதியை வைத்து சினிமாவை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்ற முடிவுடன் அருள்நிதி இப்போது இருக்கிறார்.

இதனால் முன்னணி இயக்குனர்களிடம் கமர்ஷியலான கதைகளை கேட்டு, தன்னுடைய அண்ணனின் தயாரிப்பில், பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து, தன்னுடைய ரேஞ்சை வேற லெவலுக்கு மாற்றப் போகிறார். இதனால் கண்டிப்பாக முக்கிய ஹீரோக்களின் வரிசையில் அருள்நிதி பெயர் இடம்பெறுவது இனிமேல் தவிர்க்க முடியாதது.

Also Read: உதயநிதிக்காக தலையை கொடுத்து அவமானப்பட்ட பிரபலம்.. கூட இருந்து குழி வெட்டிய மாரி செல்வராஜ்

Trending News