புதன்கிழமை, ஜனவரி 15, 2025

2 படங்களிலும் மாட்டிக்கொண்டு முழிக்கும் அருண் விஜய்.. நம்பிய படமும் கை விட்ட பரிதாபம்

அருண் விஜய் சினிமா துறையில் எப்படியாவது ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்றும் போராடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு திறமைகள் பல இருந்தும் அதிர்ஷ்டம் என்பது கொஞ்சம் கூட இல்லாத ஒரு நிலையே இருக்கிறது. அவர் துரிதமாக செயல்பட்டாலும் அவரை பிரச்சினைகள் சூழ்ந்த வண்ணம் இருக்கிறது . பெரிதும் அவர் நம்பியிருந்த யானை படம் இப்போது ரிலீசாகாமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் அந்தப் படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கிய விநியோகஸ்தர் படத்தை விற்பதில் சிக்கலை சந்தித்து வருகிறார். அவர் விட்ட இடத்திலிருந்து அவருக்குக் காசு வரவில்லை அதனால் அவர் தயாரிப்பாளருக்கு காசு கட்ட முடியவில்லை அதனால் அந்தப் படம் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . ஏற்கனவே அருண் விஜய் வா டீல் என்ற ஒரு படத்தில் நடித்து இதே பிரச்சினையை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது இரண்டு படங்களிலும் மாட்டி கொண்டு முழித்து வருகிறார். இயக்குனர் ஹரியுடன் யானை படத்தில் கதாநாயகனாக நடித்து அந்தப் படத்தை விரைவில் ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கும் அருண் விஜய், அந்தப் படத்தின் வெற்றியை வைத்துதான் ஏற்கனவே திரைக்கு தயாராக இருக்கும் அருண் விஜய்யின் நான்கு படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவெடுத்து வைத்தார் .

ஆனால் இப்பொழுது யானை படத்திற்கு வந்த சிக்கலை சரி செய்து கூடிய விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். யானை திரைப்படம் வரும் மே 6ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதுவும் நடக்காமல் போனது. இந்த படத்தில் ஹரி படத்தில் வழக்கம்போல் இருப்பது போன்றே அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார், யோகிபாபு ,போஸ் வெங்கட், சமுத்திரகனி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆகையால் படத்தின் வருகைக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் இந்த நேரத்தில் யானை படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை குறைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகராக மாற நினைக்கும் அருண்விஜயின் விடாமுயற்சி கோலிவுட்டில் பெருமையாக பேசப்பட்டாலும் அவருடைய படங்களை படாதபாடுபட்டு ரிலீஸ் செய்ய மெனக்கெடுவது அவருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

Trending News