புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

குடும்பங்கள் கொண்டாடிய மிஷன் சாப்டர் ஒன்.. அயலான் மில்லரை தகர்த்தெறிந்த அருண் விஜய்யின் தந்திரம்

Actor Arun Vijay movie Mission Chapter one day wise and collection wise Hit: கலைஞரின் எதிர்பார்ப்பு அவனது படைப்பில் இல்லை, மற்றவர்கள் அவனை கொண்டாடுவதில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் பலரது முயற்சியிலும் கடின உழைப்பிலும் உருவாகும் படைப்புகள் திரைக்கு கொண்டு வருவது என்பது சவாலான ஒன்று.

தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் என பலரும் வெற்றியுடன் எதிர்பார்த்த நிலையில் அச்சம் என்பது இல்லை என்ன துணிச்சலுடன் வந்து சத்தமில்லாமல் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது அருண்விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன்.

கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் பொங்கல் ரேஸில் அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்த நிலையில், கிடைத்த திரையரங்குகளில் தனது வெற்றி பயணத்தை துவங்கியது மிஷன் சாப்டர் ஒன்.

Also read: கூட நிக்க முடியாமல் திணறும் ரெண்டு படம்.. தனுஷை மிஞ்சி சிவகார்த்திகேயன் போடும் ஆட்டம்

துப்பாக்கி சத்தத்துடன் கூடிய பக்கா ஆக்சன் படமாக அமைந்து இளைஞர்களை கவர்ந்தது கேப்டன் மில்லர். நிறைய கிராபிக்ஸ் காட்சிகளை அரங்கேற்றி குழந்தைகளை கொண்டாட வைத்தது அயலான் இவை இரண்டையும் தாண்டி எப்போதும் தோற்றுப் போகாத தந்தை மகள் பாசத்தை கையில் எடுத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது மிஷன் சாப்டர் ஒன்.

குறைவான பட்ஜெட்டில் இங்கிலாந்து சிறையவே தமிழ்நாட்டில் செட்டு போட்டு அமைத்து கதையை மட்டுமே நம்பி களமிறங்கி விறுவிறுப்பான வியூகங்களுடன் கதையை கச்சிதமாக அமைத்து மகளைக் காப்பாற்றியது போல் படத்தை காப்பாற்றி விட்டனர் அருண் விஜய் மற்றும் ஏ எல் விஜய் இருவரும்.

மிஷன் சாப்டர் ஒன் திரைப்படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து  ஏறுமுகமாகவே வசூலை வாரி குவித்து வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்  திகைக்க வைக்கும் தொழில்நுட்பம் என பல பில்டப்புகளை கொடுத்து  ஹைப்பை எகிற வைத்த படங்களுக்கு மத்தியில் குறைவான செலவில் நிறைவாக எடுக்கப்பட்ட இப்படம் நாலு நாட்களில் 16  கோடிக்கும் அதிகமாக கலெக்ட் செய்து உள்ளது.

குறைவான எண்ணிக்கையில் திரையிடப்பட்ட மிஷன் சாப்டர் ஒன் முதல் நாளில் இருந்தே  டிக்கெட் புக்கிங் எண்ணிக்கை நாளுக்கு நாள் படிப்படியாக மடங்குகளாக உயர்ந்தது என்பது நிதர்சனமான உண்மை. கதை, வசூல், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என அனைத்திலும் மிஷன் சாப்டர் ஒன் முதலாக வந்துள்ளது. அயலான் மற்றும் கேப்டன் மில்லருக்கு மத்தியில் தில்லாக நின்று பொங்கலில் தனது வெற்றியை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் அருண் விஜய்.

Also read: Mission Movie Review – தீவிரவாதிகளில் ஊடுருவிய அருண் விஜய்.. மிஷன் பட விமர்சனம்

Trending News