வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நடிப்பெல்லாம் சும்மா ஹாபி தான்.. இவ்வளவு பெரிய நிறுவனத்தின் வாரிசா நம்ம அரவிந்த் சாமி?

Actor Arvindsamy: இயக்குனர் மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அரவிந்த்சாமி இன்றுவரை பெண் ரசிகைகளின் பேவரைட் கதாநாயகனாக இருக்கிறார். இன்று வரை அழகான ஆண் என்று பலரும் குறிப்பிட்டு சொல்லுவது அரவிந்த் சாமியை தான். அந்த அளவுக்கு தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தக் கூடியவர் இவர்.

ரோஜா திரைப்படத்திற்கு பிறகு அரவிந்த்சாமிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய வாய்ப்புகள் எதுவுமே அமையவில்லை. அவ்வப்போது இயக்குனர் மணிரத்தினத்தின் படங்களில் மட்டும் தலைகாட்டி வந்த இவர் கடைசியாக அலைபாயுதே திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்ததோடு சினிமா பக்கம் தலை காட்டவில்லை.

Also Read:அரவிந்த் சாமியை பார்த்து ஜொள்ளு விட்ட 5 ஹீரோயினிகள்.. இன்றுவரை க்ரஸ்ஷில் இருக்கும் குஷ்பூ

அதன் பின்னர் கடல் மற்றும் தனி ஒருவன் திரைப்படங்களின் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கினார். இதில் தனி ஒருவன் திரைப்படம் அரவிந்த் சாமியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என்று சொல்லலாம். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அரவிந்த்சாமிக்கு தனி கதாநாயகனாக நடிக்கவும் நிறைய வாய்ப்புகள் வந்தன. அந்த அளவுக்கு தனி ஒருவன் திரைப்படம் அவரின் அடையாளமாக மாறியது.

அரவிந்த்சாமி நடிப்பு துறையை தாண்டி பிசினஸ் மேனாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது அவருடைய பிசினஸ் பற்றி ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டின் தலைசிறந்த கண் மருத்துவமனை சங்கர நேத்ராலயா என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த மருத்துவமனையின் உரிமையாளர் வி டி சுவாமி.

Also Read:மீண்டும் வில்லன் அவதாரத்தில் அரவிந்த் சாமி- ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?

கண் சிகிச்சை பணியை இந்த நிறுவனம் ஒரு தொண்டாகவே செய்து வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரு நாளைக்கு மட்டுமே இங்கே 1200 பேருக்கு கண் அறுவை சிகிச்சை நடைபெறுமா. இதன் உரிமையாளர் வி டி சுவாமியின் மகன் தான் நடிகர் அரவிந்த்சாமி சங்கர நேத்ராலயா உரிமையாளரின் வாரிசு தான் இவர்.

நடிகர்களின் பல பேர் பொருளாதார தேவைகளுக்காக சினிமாவுக்குள் நுழைந்தவர்களாக இருப்பார்கள். இப்படி ஒரு பெரிய நிறுவனத்தின் வாரிசாக இருக்கும் அரவிந்த்சாமி சினிமாவில் இருப்பது கண்டிப்பாக அவர் நடிப்பு துறை பிடித்து போய் அதை ஒரு ஹாபியாக செய்து வருகிறார். ஒருவேளை இதனால் தான் இவர் படங்களில் கூட அதிக கவனம் செலுத்துவது இல்லை போல என தெரிகிறது.

Also Read:மணிரத்னம் அறிமுகப்படுத்திய ரத்தினக்கல்.. இளசுகளை கிறங்கடித்த அரவிந்த் சாமியின் 6 வெற்றி படங்கள்

Trending News