ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஆர்யாவுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்.. இதுவும் ஒர்கவுட் ஆகலனா மொத்தமும் சோலி முடிஞ்சிடும்

Actor Arya: நடிகர் ஆர்யாவுக்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றி படம் எதுவுமே இல்லை. தொடர்ந்த அவர் நடித்த எல்லா படங்களுமே தோல்வி அடைந்து தான் இருக்கின்றன. மொத்தத்தில் சொல்லப் போனால் இப்போதைய நிலவரப்படி ஆர்யா ஃபீல்ட் அவுட் ஆன நடிகர்களின் லிஸ்டில் தான் இருக்கிறார். சமீபத்தில் ஆர்யாவுக்கு கடைசி வாய்ப்பாக ஒரு பெரிய ஜாக்பாட் சிக்கி இருக்கிறது.

தொடர் தோல்விகளை கொடுத்து வரும் ஆர்யாவை நம்பி மும்பையை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் 100 கோடி முதலீடு செய்ய இருக்கிறார். இந்த படத்தின் வசூல் 150 கோடியை தாண்டினால் தான் ஆர்யா இனி சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். இல்லையென்றால் அவரை நம்பி எந்த ஒரு தயாரிப்பாளர்களும் இனி படம் எடுக்க முன்வர மாட்டார்கள். கிட்டத்தட்ட இது ஆர்யாவுக்கு வாழ்வா சாவா என்ற போராட்டம் தான்.

ராஜா ராணி படத்திற்கு பிறகு ஆர்யா ஹீரோவாக நடித்த எந்த ஒரு படமும் தமிழ் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் அவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சர்பட்டா பரம்பரை என்னும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கொரோனா காலகட்டத்தில் உருவானதால் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. படம் எதிர்பார்த்த வெற்றியை அடைந்தது மட்டுமில்லாமல் ஆர்யாவுக்கு என்று ஒரு தனி அடையாளத்தையும் கொடுத்தது.

Also Read:தொட்டதெல்லாம் துலங்காமல் அவஸ்தை பட்டு வரும் சிம்பு.. படத்திலும் ரியலிலும் ஜீரோவான STR

கடந்த மார்ச் மாதம் சர்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் தங்கலான் பட வேலைகளில் பிசியாக இருந்ததால் அதைத் தொடர்ந்து இந்த படத்தின் வேறு எந்த தகவல்களும் வெளிவராமல் இருந்தது. இப்போது இந்த படத்தின் அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பிக்க இருப்பதாக அப்டேட்டுகள் வெளியாகி இருக்கின்றன. ஆர்யா கடுமையாக பாக்சிங் பயிற்சியும் எடுத்து வருகிறார்.

ஆர்யாவுக்கு அடித்த  ஜாக்பாட்

ஆர்யா பாக்சிங் பயிற்சி எடுத்து வரும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு படத்திற்கான ஹைப் பை தொடங்கி இருக்கிறார். பொதுவாக வெற்றி படங்களின் இரண்டாம் பாகம் பெரிய அளவுக்கு வெற்றியை கொடுத்தது கிடையாது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் முதல் பாகத்தின் மீது வைத்த நம்பிக்கையின் பெயரில் இப்போது 100 கோடி முதலீடு செய்கிறார். இதுதான் முதன் முதலில் ஆர்யா நடிக்கும் அதிக பட்ஜெட் படம்.

சார்பட்டா பரம்பரை 2 படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுவிட்டால் முன்னணி ஹீரோக்களைப் போல ஆர்யாவும் 100 கோடி கிளப்பில் இணைந்து விடுவார். இந்த படத்தை நம்பி அவர் முழுமூச்சாக இறங்கி இருக்கிறார். இது மட்டும் கொஞ்சம் பிசகினாலும் ஆர்யாவின் சினிமா கேரியர் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும். பார்ட் 2 படங்கள் வெற்றி பெறாது என்று இருக்கும் தமிழ் சினிமாவின் விதியை சார்பட்டா பரம்பரை 2 மாற்றுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read:அடுத்த வருடம் ஆக்ஷன் படமாக களமிறங்க போகும் 5 படங்கள்.. கீரியும் பாம்புமாக நிற்கப்போகும் சிம்பு தனுஷ்

Trending News