புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சென்டிமென்ட் பார்க்கும் ஆர்யா.. யாரும் முன்வராததால் கையில் எடுக்கும் புதிய டெக்னிக்

கடந்த ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்த, தமிழ் வரலாற்று விளையாட்டு சம்பந்தப்பட்ட அதிரடி திரைப்படமாக உருவான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்த படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது.

1960-களின் பின்னணியில் வடசென்னையில் உள்ள சார்பட்டா பரம்பரை மற்றும் இடியப்ப பரம்பரை ஆகிய இரண்டு குளங்களுக்கு இடையேயான மோதலை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. இதில் குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதிலிருக்கும் அரசியலையும் சென்டிமென்ட் கலந்த காட்சிகளோடு காண்பித்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆர்யா, சார்பேட்டா பரம்பரை வெற்றிக்குப்பின் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படம் இல்லை. அதற்கு முன்னரும் அவருக்கு படங்கள் சரியாக ஓடாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்நிலையில் சார்பேட்டா பரம்பரை ஆர்யாவின் சொந்தப் படம். சொந்தப்படம் மட்டும் இவருக்கு நல்ல ஓடுவதால் தொடர்ந்து சொந்த படங்களையே இவர் எடுக்கலாம் என்ற திட்டம் தீட்டி வருகிறார்.

அடுத்து இவர் நடிக்கவிருக்கும் படம் கேப்டன். இந்தப் படமும் ஆர்யாவின் சொந்த படம் தான். அவரே தயாரித்த சார்பட்டா பரம்பரை அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் சென்டிமென்ட் ஆக இவர் தயாரிக்கும் படங்கள் ஓடுகிறது என்பதால், இவர் சொந்த தயாரிப்பு படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்த படத்தை ஏற்கனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ என்ற படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் அவர்களே இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

இதில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, தியாகராஜன், ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல், பரத் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். கேப்டன் படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு ஏற்கனவே வெளியிட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைந்து திரையிடப்படும் கேப்டன் படம் நிச்சயம் வசூல் ரீதியாக வெற்றி பெறும் என்பது ஆர்யா முழுமையாக நம்புகிறார்.

Trending News