தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா, தற்போது மோசடி வழக்கு ஒன்றில் சிக்கி உள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பலமுறை தன்னுடைய மேலாளர்களின் வங்கி கணக்கின் மூலமாக நடிகர் ஆர்யா சுமார் ரூபாய் 70 லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.
அதன்பின்பு சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்து கொண்டதை அறிந்த விட்ஜா, இதுகுறித்து சமூக வலைதளம் மூலமாக நடிகா் ஆர்யா மீது புகார் அளித்தார். அதன்பின்பு கடந்த 10-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அதன் பின்பு கடந்த 24 ஆம் தேதி ஆர்யாவைப் போல் நடித்த ஜெர்மனி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதாக,
புளியந்தோப்பை சேர்ந்த இருவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன்பின் இந்த வழக்கிற்கும் ஆர்யாவிற்கும் எந்த தொடர்புமில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். ஆனால் ஆறு மாதத்திற்கு முன்பே ஜெர்மனி பெண் போலீசாரிடம் புகார் அளித்த போதே,
ஆர்யா தாமாக முன்வந்து தன்னைப் போலவே நடித்து ஏமாற்றுகிறார்கள் என்ற, எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லையே? மேலும் ஜெர்மனி பெண்ணிடம் ஆர்யா வீடியோ கால் மூலமாக பேசிய ஆதாரத்தை வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கேட்டுள்ளனராம்.
எனவே இந்த புகாரில் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஆர்யா மற்றும் அவருடைய தாய் இருவரையும் உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆர்யாவின் தரப்பில் இருக்கும் குற்றத்தை சைபர் கிரைம் போலீசார் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்களா? என்ற கேள்வியையும் ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வெளிவந்த இந்த ஆதாரம் எந்த அளவிற்கு உண்மை என்பதை தீவிர விசாரித்து காவல்துறை தங்களது பதிலை அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.