Actor Dhanush and shivaraj kumar combination movie captain miller flop in karnataka: கடந்த ஆண்டு ரிலீஸ் ஆக இருந்து, சற்று தாமதத்திற்கு பின் இந்த பொங்கல் விடுமுறையை குறிவைத்து அதிக திரையரங்குகளை கைப்பற்றி தமிழ்நாடு கர்நாடகா என இரு மாநிலங்களிலும் மாஸாக களம் இறங்கியது கேப்டன் மில்லர் .
சாணிக்காயிதம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்து பொங்கல் அன்று வெளியான கேப்டன் மில்லரை ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
கருத்து சொல்ல வேண்டும், தன் மக்களை காப்பாற்ற வேண்டும் என பல உயர்ந்த நோக்கங்களுடன் வந்த கேப்டன் முழுக்க முழுக்க வன்முறையை கையில் எடுத்து ரசிகர்களை போதும் விட்டுடுங்க என்ற அளவு கெஞ்ச வைத்து விட்டார். ஜெயிலரில் ரஜினி சிவராஜ்குமாருக்கு மாஸ் என்ட்ரி வைத்திருப்பார். அதே போல் கிளைமாக்ஸிலும் அவர் வரும்போது ரஜினிக்கு உண்டான அதே தீம் மியூசிக் வைத்து பட்டையை கிளப்பியிருந்தார்கள்.
இதே பார்முலாவை கேப்டன் மில்லரிலும் அப்ளை பண்ணி இரு மாநிலத்து ரசிகர்களையும் கொண்டாட வைத்து வசூலை வாரி குவிக்க வேண்டும் என்று தப்பு கணக்கு போட்டு விட்டனர் கேப்டன் மில்லர் பட குழுவினர். ஆம் படம் முழுக்க தனுஷை மாஸாக காட்டிவிட்டு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு போதிய அழுத்தம் கொடுக்காமல் டீலில் விட்டதோடு கடைசியாக அவரது கையில் கத்தியை கொடுத்து சண்டை போட சொல்லி காமெடி பண்ணி இருந்தார்கள்.
இதனால் வெகுண்டு எழுந்த கன்னட ரசிகர்கள், நீங்க துப்பாக்கி வச்சிருப்பீங்க! எங்க தலைவர் மட்டும் கத்தியில சண்டை போடணுமா? என கொந்தளித்தனர். கர்நாடகாவில் தனுஷின் படம் நார்மலாக 1.5 கோடிக்கு தான் போகும். இப்படத்தை சிவராஜ்குமார் தான் மாஸ் என்று காட்டி 3.5 கோடிக்கு விற்பதாக இருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு 3.5 கோடிக்கு பதில் பாதிக்குப் பாதியாக1.5 கோடி மட்டுமே கொடுத்துள்ளனர்.
ரஜினி மாதிரி சிவராஜ்குமாரை நடிக்க வைத்து கர்நாடகாவில் ரஜினிக்கு ஈக்குவலா மார்க்கெட் வர தனுஷ் பண்ண ஐடியா கேவலமா போனது. எல்லோரும் புலி ஆகி விட முடியுமா? பாவம் கன்னட சூப்பர் ஸ்டார் சற்று யோசித்து முடிவு எடுத்திருக்கலாம்.
Also read: தொட்டதெல்லாம் பொன்…! சின்ன மீனை போட்டு தனுஷ் பிடித்த 4 சுறாக்கள்