Dhanush: இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
தன்னுடைய ஆரம்ப கட்ட சினிமாவிலிருந்து தனுஷ் தன்னை இளையராஜாவின் ரசிகராக நிலை நிறுத்திக் கொண்டார்.
பல இடங்களில் இளையராஜாவின் பாட்டுக்களை பாடி அவருடைய மனதையும் வென்றிருக்கிறார். கடைசியாக விடுதலை படத்தில் இளையராஜா உடன் பாடும் வாய்ப்பை பெற்றார்.
வெளியேறிய தனுஷ்
இந்த நிலையில் தான் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
இதைத்தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து படபிடிப்பு ஆரம்பித்தது. திடீரென ஏதோ ஒரு பிரச்சனையில் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு வேலையை மீண்டும் ஆரம்பித்து இருக்கிறது பட குழு.
இந்த படத்தை கனெக்ட் மீடியா என்னும் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தனுஷின் வொண்டர் பார் நிறுவனமும் தயாரிப்பதாக இருந்தது.
இந்த நிலையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறது.
ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் கனெக்ட் மீடியா உடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. மற்றபடி இளையராஜா கேரக்டரில் தனுஷ் தான் நடிக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.