வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவை பாலோ செய்த நடிகர் தனுஷ்.. சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட சம்பவம்

நடிகர் சூர்யாவுக்கு கோலிவுட்டில் ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தவர் தான் இயக்குனர் பாலா. பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. அதன் பின்னர் பிதாமகன் படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினர். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது.

அதன் பின்னர் ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற பிரம்மாண்ட வெற்றிகளுக்கு பிறகு சூர்யாவும், இயக்குனர் பாலாவும் வணங்கான் திரைப்படத்தில் ஒன்று சேர்ந்தனர். இது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது.

Also Read: அடுத்தடுத்து தனுஷ், விஜய்யை லாக் செய்த மாறன் பேமிலி .. மாஸ்டர் பிளானில் வெளிவரும் படங்கள்

ஆனால் வணங்கான் படம் ஆரம்பித்த நாளிலிருந்து சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே பிரச்சனை என்று அவ்வப்போது வதந்திகள் கிளம்பி கொண்டு இருந்தன. அதே நேரத்தில் படப்பிடிப்பு வேலைகளும் நடந்து கொண்டுதான் இருந்தன. இதற்கு இடையில் திடீரென்று நடிகர் சூர்யா வணங்கான் படப்பிடிப்பிலிருந்து கிளம்பி சென்னை வந்து விட்டார்.

அதன் பின்னர் தான் படப்பிடிப்பின் போது நடந்த பிரச்சினைகள் எல்லாம் பூதாகரமாக வெளிவர தொடங்கின. இருந்தாலும் சூர்யா இது பற்றி இதுவரை எதுவும் பேசாமல் மௌனம் காத்து தான் வருகிறார். இயக்குனர் பாலா மட்டும் சூர்யா இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார். மேலும் வேறு ஒரு நடிகரை வைத்து படத்தை தொடங்குவதாகவும் கூறினார்.

Also Read: சூர்யா பட நடிகையை எல்லை மீறி தடவிய நபர்.. கோபத்தில் கொந்தளித்த சிம்பு பட நடிகை

நடிகர் சூர்யாவை போலத்தான் இப்போது தனுஷும் செய்திருக்கிறார். வாத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு தனுஷ் கேப்டன் மில்லர் பட வேலைகளை தொடங்கினார். இந்த படத்தை இயக்குனர் அருண் மாத்தீஸ்வரர் இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் கேரளா பார்டரில் நடந்து கொண்டிருக்கின்றன.

படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது என்று சரியாக தெரியவில்லை. நடிகர் தனுஷ் படப்பிடிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு தனது சொந்த காசிலேயே சென்னை திரும்பி இருக்கிறார். இதுவரை தனுஷ் திரும்ப வந்ததற்கான காரணம் தெரியவில்லை. விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

Also Read: சூர்யா மாதிரி ஒரு ஹிட் கொடுக்கணும்.. நெல்சனுக்கு பின் ரஜினி தட்டி தூக்கிய இயக்குனர்

Trending News