வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இனி நடிச்சா ஹீரோ தான்.. சூரியை தூக்கிவிட துணையாய் நிற்கும் தனுஷின் நெருங்கிய வட்டாரம்

நடிகர் சூரி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு காமெடியனாக நிலைத்து நின்றவர். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது. சூரிக்கு அடுத்தடுத்து பெரும்பாலான வாய்ப்புகளை கொடுத்தது என்றால் அது நடிகர் விமல் மற்றும் சிவகார்த்திகேயன் தான்.

திரையில் எங்கோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த சூரி அதன் பின்னர் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என அத்தனை ஹீரோக்களின் படங்களிலும் காமெடியானாக நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் இவருக்கு காமெடியே வராது, இவர் பண்ணுவதெல்லாம் காமெடியா என்று பல நேரங்களில் ட்ரோல் செய்யப்பட்டிருக்கிறார்.

Also Read:விடுதலை படத்தின் ரகசியத்தை உளறிய சேத்தன்.. வெகுளியாய் மொத்த உண்மையையும் உடைத்த ஓசி

இப்படி பல வகையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்த நடிகர் சூரி வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட்டது இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படம் தான். இவரை எல்லாம் ஹீரோ ஆக்குகிறாரா வெற்றிமாறன் என்று பலரும் விமர்சித்த நிலையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் இவர்.

இனி சூரியே நினைத்தாலும் காமெடியானாக நடிக்க முடியாத அளவிற்கு அவருக்கு ஹீரோ வாய்ப்புகளும் குவிய தொடங்கி விட்டன. சூரி அடுத்தடுத்து கொட்டுக்களி, ஏழுமலை ஏழு கடல் போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சூரியை ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய அளவில் சப்போர்ட் செய்து வருகிறார்.

Also Read:இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் இளையராஜா.. திட்டம் போட்டு காய்களை நகர்த்தும் வெற்றிமாறன்

சூரி அடுத்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்த இயக்குனர் ஏற்கனவே தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை, எதிர்நீச்சல் மற்றும் நடிகர் தனுஷ் நடித்த கொடி போன்ற படங்களை இயக்கியவர். இவர்தான் தற்போது சூரியை ஹீரோவாக வைத்து படம் பண்ண இருக்கிறார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இருவருமே சூரியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக அவருக்கு துணையாக நிற்கிறார்கள். இனி சூரி ஹீரோவாக மட்டுமே தமிழ் சினிமாவில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இனி அவர் காமெடியாக நடிக்க வாய்ப்புகள் ரொம்பவும் குறைவு. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இவர் ஹீரோவாக நிலைத்து நிற்பார் என்று ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Also Read:ஏ சர்டிபிகேட் வாங்கிய விடுதலை படம்.. சென்சாரில் கட் செய்யப்பட்ட 12 வார்த்தைகள்

Trending News