Dhanush: தனுஷை சுற்றி ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் வேலையில் வெள்ளைக்காரன் என்பதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார். ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கிய தனுஷ் கைவசம் தற்போது 10 படங்கள் இருக்கின்றன.
இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நாகார்ஜுனா மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் குபேரா. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. அதை தொடர்ந்து தானே இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் இட்லி கடை.
திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து தனுஷ் மற்றும் நித்தியா மேனன் கெமிஸ்ட்ரியின் அடுத்து இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடிகை ஷாலினி பாண்டேவும் நடித்திருக்கிறார். அடுத்து தனுஷ் இயக்கி இருக்கும் படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். அ
னிகா சுரேந்திரன் ஹீரோயின் ஆக நடிக்க தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் வரும் கோல்டன் ஸ்பேரோ பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
சொடக்கு போட்டா சம்பவம் தான்
அம்பிகாபதி, அட்ரங்கீரே படங்களை தொடர்ந்து அடுத்து இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஹிந்தி படம் தான் TereIshkMein. நடிகர் தனுஷின் 55 ஆவது படமாக உருவாகிக் கொண்டிருப்பது தான் இசைஞானி இளையராஜாவின் பயோபிக். இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ் அவருக்காக செய்திருக்கும் பெரிய விஷயம் தான் இந்த படம். இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைய இருக்கிறார். இந்த படம் ஓரளவுக்கு எல்லாமே முடிவாக்கப்பட்ட விட்டது. மாமன்னன் படத்தின் மூலம் மாரி செல்வராஜ் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் அதிகரித்திருக்கும் நிலையில் கர்ணனை விட தரமான படம் ரெடி ஆகி கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து ஏற்கனவே கேப்டன் மில்லர் என்னும் படத்தில் தனுஷ் இணைந்து இருந்தார். மீண்டும் அதே கூட்டணியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. தனுஷின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது புதுப்பேட்டை தான்.
இதன் இரண்டாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் தனுஷை பார்ப்பதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் அதிக ஆவலோடு இருக்கிறார்கள். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது ஆயிரத்தில் ஒருவன் தான்.
தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாட காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என்பதை இருவருமே ரசிகர்களிடையே உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அஜித்தின் ஆபத்தான இயக்குனராக இருந்து தற்போது விஜயின் கடைசி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஹச் வினோத். வினோத் உடனும் இணைந்து தனுஷ் படம் பண்ண இருக்கிறார்.