என்னதான் தனுஷ் கோலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தாலும், தற்போது ஹாலிவுட் வரை சென்று தன்னுடைய திறமையை காட்டியுள்ளார் தனுஷ்.
மேலும் தனுஷ் வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து, அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து நடிப்பதால், தனுஷின் படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறுகின்றன. அதுமட்டுமில்லாமல், கோலிவுட்டில் தனக்கென தனியொரு ரசிகர் பட்டாளத்தையும் தனுஷ் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோலிவுட் இண்டஸ்ட்ரியில் உள்ள நடிகர்களில் மிகவும் பிஸியான நடிகர் என்றால் அது தனுஷ் தான் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் தனுஷின் கைவசம் தற்போது 11 படங்கள் உள்ளதாம்.
அந்த படங்களை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகின்றன. இதனை அறிந்த தனுஷ் ரசிகர்களும் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தனுஷ் கைவசம் உள்ள படங்களின் லிஸ்ட் இதோ:
- D40 – ஜகமே தந்திரம்
- D41 – கர்ணன்
- D42 – ராம்குமார் (ராட்சசன் படத்தின் இயக்குனர்)
- D43 – கார்த்திக் நரேன்
- D44 – மித்ரன் ஜவஹர்
- D45 – அத்ரங்கிரே
- D46 – ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் ப்ரொடக்ஷன்
- D47 – வடசென்னை2
- D48 – கார்த்திக் நரேன்
- D49 – ரூசோ பிரதர்ஸ் அவெஞ்சர்ஸ்
- D50 – ஆயிரத்தில் ஒருவன் 2
எனவே, இந்த லிஸ்டை பார்த்த திரையுலகினரும், தனுஷ் ரசிகர்களும் மிரண்டு போய் உள்ளதோடு, அவருக்கு சமூக வலைத் தளங்களின் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனராம்.
ஈஸ்வரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிம்பு இனி பேசக்கூடாது செயலில் காமிக்க வேண்டும் என்று தெரிவித்து இருப்பார். அதனை தற்போது தனுஷ் சத்தமில்லாமல் சாதித்துவிட்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மீண்டும் தனுஷ் மற்றும் சிம்புக்கு இடையிலான போட்டி 2021 களைகட்ட ஆரம்பித்துவிட்டது.