வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நிற்காமல் ஓடும் பந்தயக்குதிரை.. அடேங்கப்பா! தனுஷ் கைவசம் இத்தனை படங்களா

Dhanush upcoming movies: நம்மள சுத்தி இருக்கவன் பேசுறத கண்டுக்காம வெற்றியை நோக்கி மட்டுமே ஓடுனா எப்பவுமே நினைச்சதை சாதிக்கலாம் என்பதற்கு உண்மையான எடுத்துக்காட்டு தான் நடிகர் தனுஷ். ஆரம்ப காலகட்டத்தில் இருந்த நெகட்டிவ் விமர்சனங்களாக இருக்கட்டும், வளர்ந்த நடிகர் ஆன பின்பு சந்தித்து கொண்டிருக்கும் சர்ச்சைகளாக இருக்கட்டும் அத்தனையும் காதில் வாங்காமல் தன்னுடைய இலக்கை நோக்கி ஓடி கொண்டே இருக்கிறார். மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடனான விவாகரத்திற்கு பிறகு, இன்னுமே வேகமாக ஓடி கொண்டிருக்கிறார். தனுஷ் கைவசம் அடுத்தடுத்து இருக்கும் 6 படங்களை பற்றி பார்க்கலாம்.

தனுஷ் கைவசம் இருக்கும் படங்கள்

D 51: நடிகர் தனுஷ், தேசிய விருது வென்ற இயக்குனர் ஷங்கர் கம்முலா உடன் இணைந்து தன்னுடைய 51வது படத்தில் நடித்து கொண்டிருக்கார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் நாகார்ஜுனா மட்டும் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி கொண்டிருக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

புதுப்பேட்டை 2: நடிகர் தனுஷின் சினிமா வாழ்க்கையை மொத்தமாக புறத்தை போட்ட படம் தான் புதுப்பேட்டை. இயக்குனர் செல்வராகவன் இயக்கதில் வெளியான இந்த படம் பொருளாதார அளவில் வெற்றி பெறாவிட்டாலும், ரசிகர்களின் மனதில் இன்றும் இடம் பெற்று இருக்கிறது சமீபத்தில் செல்வராகவன் இந்த வருடத்தில் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் செல்வராகவன் ஓகே சொன்னால் அவருடன் இணைந்து இரண்டாம் பாகத்தில் பணிபுரிவேன் என்று சோனியா அகர்வாலும் விருப்பம் தெரிவித்திருக்கிறார். புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

Also Read:தாவணி போட்ட தீபாவளி மீரா ஜாஸ்மின் நடித்த 5 ஹிட் படங்கள்.. கிறுக்குத்தனமாக விஜய்யை காதலித்த மீரா

ராயன் (D 50): பவர் பாண்டி படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தன்னுடைய 50 வது படம் ஆன ராயன் படத்தை இயக்கி நடித்து கொண்டிருக்கிறார். இந்த படம் பழிவாங்கும் கதைப்படலத்தை மையமாக கொண்ட திரைக்களம் ஆகும். ராயன் படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள் .

நிலவுக்கு என் மேல் என்ன டி கோபம்: ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் மூன்றாவதாக இயக்க இருக்கும் படம் தான் நிலவுக்கு என் மேல் என்ன டி கோபம். படத்தின் டைட்டிலே அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டது. மேலும் இந்த படத்தின் மூலம் தனுஷ் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். அனிகா சுரேந்திரன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் தனுஷ் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

ஆயிரத்தில் ஒருவன் 2: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் ஆயிரத்தில் ஒருவன். தனுஷ் நிறைய மேடைகளில் இந்த படத்தில் அவர் நடிக்க ஆசைப்பட்டதாக சொல்லியிருக்கிறார் . அவருடைய ஆசையை போலவே ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தான் நடிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது.

தேரே இஷ்க் மெய்ன்: தனுஷுக்கு ஏற்கனவே பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் அத்ராங்கி ரே என இரண்டு வித்தியாசமான காதல் படங்களை கொடுத்தவர் தான் ஆனந்த் எல்.ராய். இவருடன் மூன்றாவது முறையாக தனுஷ் இணைகிறார். இந்த படத்தை படக்குழு ‘தி வேர்ல்டு ஆப் ராஞ்சனா’ என அடையாளப்படுத்தி இருப்பதால், ராஞ்சனா 2 எனவும் இந்த படத்தை குறிப்பிடுகிறார்கள் . தனுஷின் மற்ற 2 காதல் படங்களை போல இந்த படமும் முழுக்க காதல் திரைக்கதை தான்.

Also Read:உனக்கு அரசியல் ஆசை வரவே கூடாதுன்னு தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்யின் 5 படங்கள்.. அப்ப G.O.A.T கசாப்பு கடைக்கு போவது உறுதியா?

Trending News