புதன்கிழமை, ஜனவரி 8, 2025

படப்பிடிப்பில் அக்கப்போரு பண்ணும் தனுஷ்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

Actor Dhanush: நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்தடுத்து அவருடைய 50 மற்றும் 51 வது படத்தின் அப்டேட்டுகள் வந்துவிட்டன. மேலும் ராஞ்சனா, அத்ராங்கி ரே போன்ற பாலிவுட் படங்களை தனுஷை வைத்து இயக்கிய இயக்குனருடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்.

தனுஷை பொருத்தவரைக்கும் ஆரம்ப காலங்களில் ஏனோ தானோ என்று படங்களில் நடித்துக் கொண்டு இருந்தவர், தற்போது நிறைய சமூக பொறுப்புள்ள படங்களில் நடிப்பதோடு, பல விழா மேடைகளில் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்வதோடு, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் செய்யாத நடிகராகவும் தன்னை காட்டிக் கொள்கிறார்.

Also Read:மாமனார், மருமகனுக்குள் நடக்கும் போட்டா போட்டி.. தலைவர் 170-ல் இணைந்த கேரளத்து பைங்கிளி

அறிவுரை எல்லாம் ஊருக்குத்தான் என்பது போல் தனுஷ் தற்போது குற்றாலத்தில் பயங்கரமாக ஆட்டம் போட்டு வருகிறாராம். கேப்டன் மில்லர் படம் முழுக்க முழுக்க திருநெல்வேலி, தென்காசி பகுதிகளை சுற்றி தான் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது படக்குழு குற்றாலத்தில் தங்கியிருக்கிறது. அங்கு தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்போது குற்றாலம் சென்றால் தனுஷை பார்க்கலாம் என்ற அளவிற்கு பயங்கரமாக லூட்டி அடித்து வருகிறாராம் தனுஷ். அவரோடு சீனியர் நடிகர்களான சிவராஜ்குமார் ,சந்திப் கிசான் ஆகியோரும் இணைந்து ஜாலியாக சுற்றி வருகிறார்கள். படப்பிடிப்பு முடிந்தவுடன் இரவு ஹோட்டலில் சென்று சாப்பிடுவது, ஊர் சுற்றுவது என பிசியாக இருக்கிறார்களாம்.

Also Read:செல்வராகவனை காலி பண்ணிய 5 படங்கள்.. இலக்கே இல்லாமல் மொத்த கஜானாவை காலி பண்ணிய படம்

பகல் நேரத்திலேயே எந்த ஹோட்டலில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதை விசாரித்து இரவில் அந்த ஹோட்டலில் தான் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுகிறார்களாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹோட்டல் என பொழுதை கழித்து வருகிறாராம் தனுஷ். மொத்தத்தில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தளம் தற்போது பிக்னிக் போல் இருக்கிறதாம்.

பொதுவாக இது போன்ற முன்னணி ஹீரோக்கள் ஒரு படத்தில் கமிட் ஆகும்பொழுது, அவர்களுக்கு தேவையான எல்லா செலவையும் தயாரிப்பாளர் தான் ஏற்றுக்கொள்கிறார்கள். இப்போது தனுஷ் மற்றும் அவருடன் நடிக்கும் முன்னணி ஹீரோக்கள் அடிக்கும் லூட்டி மொத்தத்தின் செலவையும் தயாரிப்பாளர் தலையில்தான் கட்டியிருப்பார்கள். அந்த தயாரிப்பாளரின் நிலைமை தான் தற்போது ரொம்பவும் கஷ்டம்.

Also Read:பொறுத்தது போதும் என அடக்குமுறைக்கு தீர்வு கண்ட 6 படங்கள்.. அசுரனாய் தெறிக்க விட்ட சிவசாமி

Trending News