சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வஞ்சகத்தால் திலீப் செய்த படுபாதக செயல்.. நம்பி பழகியதால் நரகத்தை அனுபவித்த பாவனா

தனி சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. இவர் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். தமிழில் தீபாவளி, வெயில், கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அசல் படத்தில் நடித்த பிறகு இவருக்கு தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை.

நடிகை பாவனா மலையாள சினிமா உலகில் தான் அறிமுகமானார். இவர் கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர். இவர் தமிழை விட மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவருக்கு பிப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டு தம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு துயர நாளாக அமைந்துள்ளது. பாவனா திருச்சூரில் இருந்து கொல்லம் செல்லும் வழியில் தன் காரில் கடத்தப்பட்டு இரண்டரை மணி நேரம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார்.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் சுனில் என்கிற பன்சர் சுனில். இவர் மலையாள சினிமாவில் உள்ள நட்சத்திரங்களுக்கு வேண்டிய வேலைகளை செய்து கொடுக்கும் ஒரு ஏஜென்ட். இவர் பாவனாவுக்கு நன்கு பழக்கமானவர். அது மட்டுமின்றி அவரை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலை செய்ததும் இவர்தான்.

தனக்கு நடந்த அநியாயத்தை தட்டிக் கேட்கும் விதமாக காவல் நிலையம் சென்றார் நடிகை பாவனா. அந்த கேவலமான செயலை பல்சர் சுனில் செய்ததற்கு முக்கிய காரணம் நடிகர் திலீப். அவர்தான் தன்னை இவ்வாறு செய்யச் சொன்னதாக சுனில் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

Dilip-Bavana-Cinemapettai.jpg
Dilip-Bavana-Cinemapettai.jpg

திலீப் இவ்வாறு செய்ய சொன்னதற்கு முக்கிய காரணம், அவர் காவியா மாதவனுடன் நெருங்கியிருக்கும் போட்டோக்களை தன் முதல் மனைவியான மஞ்சு வாரியாருக்கு, நடிகை பாவனா அனுப்பியதாகவும். அதனால்தான் மஞ்சுவாரியருக்கும் நடிகர் திலிப்பிற்கும் பிரச்சனை வந்து விவாகரத்து ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதனை மனதில் வைத்துதான் நடிகர் திலீப் பாவனாவிற்கு இப்பேர்ப்பட்ட ஒரு படுபாதக செயலை செய்துள்ளார். அதன்பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Trending News