வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

குடும்ப மானத்தை கூறு போட்டு விற்கும் சமந்தா.. வெளியில் தலை காட்ட முடியாமல் இருக்கும் வாரிசு நடிகர்

Actress Samantha: சமந்தா நடிப்பில் வெளியாகியிருக்கும் குஷி படம் தியேட்டரில் படு பயங்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சில காலமாக சமந்தாவை கெட்ட நேரம் பிடித்த ஆட்டி வந்த நிலையில் இப்போது விடா முயற்சி மூலம் மீண்டும் தரமான என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதுவும் குஷி படம் வேற லெவலில் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

விஜய் தேவரகொண்டா உடன் இந்த படத்தில் அவர் இணைந்து நடித்துள்ள நிலையில் இருவருக்கும் படத்தில் ஓவர் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. அதாவது மிகவும் நெருக்கமான காட்சிகள் இவர்களுக்கும் குஷி படத்தில் இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கூட இருவரும் நிற்கும் காட்டியதை பலரும் விமர்சித்து பேசி இருந்தனர்.

Also Read : உப்பு சப்பு இல்ல, கோவில் கோவிலா போனா மட்டும் படம் ஓடுமா.? விஜய், சமந்தாவின் குஷியை பஞ்சர் செய்த ப்ளூ சட்டை மாறன்

ஆனாலும் ஓவர் கெமிஸ்ட்ரியால் இப்போது சமந்தாவின் கேரியர் மீண்டும் பழையபடி உயர்ந்துள்ளது. இதனால் வாரிசு நடிகர் ஒருவர் மனவேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது. சமந்தா சினிமாவுக்கு வந்த சிறு வருடங்களிலேயே தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து வந்தார்.

இரு குடும்பங்களின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் மிக விமர்சையாக நடைபெற்றது. ஆனால் சில காரணங்களினால் இருவரும் விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பிறகு தான் சமந்தா படங்களில் ஓவர் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.

Also Read : Kushi Movie Review- மூச்சு முட்ட காதலிக்கும் விஜய் தேவரகொண்டா-சமந்தா.. குஷி எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

இப்போது விஜய் தேவரகொண்டவுடன் குஷி படத்தில் ஓவர் ரொமான்ஸ் செய்திருப்பதால் நாக அர்ஜுன் குடும்பம் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாம். சமந்தா விவாகரத்து பெற்றாலும் அவர்கள் குடும்பத்து மருமகளாகத்தான் தெலுங்கு சினிமா மக்கள் இப்போதும் பார்த்து வருகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் நாக சைதன்யா ஞாபகம் வருகிற இடம் முழுக்க எல்லோரும் கலாய்த்து வருகிறார்களாம். அவருடைய முன்னாள் மனைவி இவ்வாறு வேறு ஒருவருடன் இணைத்து வைத்து பேசுவது அவருக்கும் வருத்தத்தை அளித்திருக்கிறது. ஆனால் சமந்தாவுக்கு இப்போது அடுத்த அடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Also Read : ஜெயிலர் வேகத்தை குறைத்த குஷி.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

Trending News