தமிழ் சினிமாவில் ஸ்போர்ட்ஸ் படம் மூலம் அறிமுகமான அந்த நடிகர் தற்போது கவனிக்கப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் உருகி உருகி காதலித்த தன்னுடைய முதல் மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்தார். இந்த செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர் தான் அந்த பிரபல நடிகர். இருந்தாலும் சினிமாவில் பந்தா காட்டாமல் ஆரம்பத்தில் ஒழுக்கமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக படங்கள் நன்றாக நடித்தாலும் அவருடைய கேரக்டர் சரியில்லை என்கிறார்கள்.
நான் பெரிய ஆள் என செல்லும் இடமெல்லாம் பந்தா காட்டிக் கொள்கிறாராம். சமீபத்தில் ஒரு விளையாட்டு வீராங்கனை மீது காதல் ஏற்பட்ட காரணத்தினால் ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை விவாகரத்து செய்தார்.
விவாகரத்திற்கு அது மட்டும் காரணமில்லை என்கிறார்கள். அந்த நடிகர் நடித்த சில படங்கள் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கிய போது அந்த இரண்டாவது காதலிதான் பிரச்சனைகளை முடித்து வைத்தாராம். இதன் காரணமாக இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி விட்டதாம்.
இதன் காரணமாகவே அரங்கேறியது விவாகரத்து என்கிறார்கள். இது ஒருபுறமிருக்க அந்த இரண்டாவது காதலியுடன் சேர்ந்து பிரபல நடிகர் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லையாம். முதல் முறை காதல் செய்பவர்கள் கூட தோற்று விடுவார்களாம். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் முத்தம் கொடுப்பது, கட்டி பிடிப்பது என புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வயிற்று எரிச்சலை கிளப்பி விடுகிறார்கள்.
ஏற்கனவே முதல் மனைவி இவருடைய இரண்டாவது காதலியை பார்த்து கடுப்பாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது அந்த நடிகர் காதலியை கூட்டிக்கொண்டு மாலத்தீவுக்கு ஜாலி பண்ணி கிளம்பி விட்டாராம். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல அந்த நடிகரின் நடவடிக்கைகள் எதுவுமே முதல் மனைவிக்கு சுத்தமாக புரியவில்லையாம். உயிருக்குயிராய் இருந்தவர் இப்படி மாறிவிட்டாரே, எல்லாம் பணம் தான் காரணமா என தலையில் அடித்துக் கொள்கிறாராம்.