புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அய்யா, இனி மேல் ஒழுங்காக இருக்கேன், வாய்ப்பு கொடுங்க.. தயாரிப்பாளர்களிடம் கெஞ்சும் பிரபல நடிகர்

முதல் படத்திலேயே உச்ச நடிகர் ரேஞ்சுக்கு வளர்ந்த அந்த நடிகர் மவுசு வந்தபிறகு தயாரிப்பாளர்களை நாயை விட கேவலமாக நடத்தி பந்தா பண்ணிய சம்பவங்கள் தற்போது அவருக்கு வினையாக முடிந்துள்ள செய்தி தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவர் அந்த நடிகர். அதன்பிறகு புகழ் உச்சத்திற்கு செல்ல பட வாய்ப்பு கிடைத்தால் போதும், பணம் சம்பாதித்தால் போதும் என மட்டமான படங்களில் தொடர்ந்து நடித்தார். அதன் விளைவு தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டி ருக்கிறார். சுமாரான படங்களில் நடித்தது கூட பரவாயில்லை, ஆனால் தயாரிப்பாளர்களிடம் பந்தா காட்டியது கொஞ்சநஞ்சம் இல்லையாம்.

ஆடி காரில் தான் சூட்டிங் போவாராம், பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவாராம், பத்தாததுக்கு இரவு பார்ட்டிக்கு ஃபாரின் சரக்கு தான் வேண்டுமாம், பத்தாதுக்கு தயாரிப்பாளர்கள் மாமா வேலை வேற பார்க்க வேண்டுமாம். அப்பப்பா! அந்த நடிகரின் டார்ச்சல்களை சொல்லி மாளாது.

அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களை நோகடித்துள்ளார். சுமாரான மார்க்கெட் இருக்கும்போதே தயாரிப்பாளர்களை படாதபாடுபடுத்திய அந்த நடிகருக்கு சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லையாம். எந்த ஒரு தயாரிப்பாளரும் அந்த நடிகரை வைத்து படம் தயாரிக்க மாட்டேன் என ஓபன் ஆக சொல்லிவிட்டார்களாம்.

இதனால் தன்னுடைய தப்பை எல்லாம் உணர்ந்து தற்போது தயாரிப்பாளர்களிடம் சரண்டர் ஆகி விட்டாராம் அந்த நடிகர். எனக்கு ஆட்டோ கொடுத்தால் கூட போதும் சூட்டிங்கிற்கு வருகிறேன் எனவும், 5 ஸ்டார் ஹோட்டல் எல்லாம் வேண்டாம் சூட்டிங்கில் ஒரு மரத்தடியில் கட்டில் போட்டு கொடுங்கள் போதும் எனவும் அநியாயத்துக்கு பொங்குகிறாராம்.

இதையெல்லாம் பார்த்து ஏமாறுவதற்கு நாங்கள் ஆளில்லை எனவும், இனிமேல் உங்க கேரியர் காலிதான் எனவும் அந்த நடிகருக்கு அச்சம் கொடுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள். இருந்தாலும் நெருக்கமான ஒண்ணு ரெண்டு தயாரிப்பாளர்களுக்கு பொடி போட்டு வசியம் செய்து வருகிறாராம்.

ஆடிய ஆட்டமென்ன, பேசிய வார்த்தை என்ன என்ற பிளாஷ்பேக் கதை தான்!

Trending News