வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நடிகர் ஹம்சவர்தனின் மனைவி கொரோனாவால் காலமானார்.. அவரும் ஒரு பிரபல நடிகைதான்

மானசீக காதல் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹம்சவர்தன் இவர் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரன் மகன்தான் ஹம்சவர்தன்.

நடிகராக பெரிய அளவில் வரமுடியவில்லை என்றாலும் நடிப்பது மட்டுமல்லாமல் சில படங்களை தயாரிக்கவும் செய்தார். ஹம்சவர்தன் சில வருடங்களுக்கு முன்பு சாந்தி என்ற நடிகையை திருமணம் செய்தார். கார்த்திக் நடித்த கிழக்கு முகம் படத்தில் அறிமுகமாகி அவரும் 15 படங்களில் நடித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹம்சவர்தன் மனைவி சாந்தி கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

hamsavarthan-wife-shanti
hamsavarthan-wife-shanti

தொற்று அதிகமாகி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நடிகை சாந்தி அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு சினிமாபேட்டை சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Trending News