செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

66 வயதிலும் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் கிருத்திக் ரோஷனின் அம்மா.. விட்டா அவருக்கே டஃப் கொடுப்பாங்க போல!

பாலிவுட் நட்சத்திரங்களின் முன்னணி நடிகராக இருப்பவர் கிருத்திக் ரோஷன். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இந்தியா அளவில் சிறந்து நடனமாடும் நடிகர்களில் பட்டியலில் இவரும் தக்கவைத்துள்ளார்.

இவரது நடிப்பில் வந்த ‘கிறிஸ்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘தூம்’ திரைப்படம் இன்னும் ரசிகர்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றது.

பொதுவாக பாலிவுட் நடிகர்களும், அவர்களது பெற்றோர்களும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வகையில் 47 வயதான கிருத்திக் ரோஷனும், 66 வயதான அவரது அம்மாவும் இன்று வரை இளமை மாறாமல் உடற்பயிற்சியின் மூலம் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளனர்.

அவர்களது புகைப்படத்துடன், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் மற்றும் சரண்யா அவர்களின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு, மீம்ஸ்  நாயகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

hrithik-roshan-mom
hrithik-roshan-mom

ஏனென்றால் பாலிவுட்டில் இருக்கும் நிலவரத்தையும், கோலிவுட்டில் இருக்கும் எதார்த்தத்தையும் வேறுபடுத்தி ரசிகர்களை சிரிக்க தூண்டியுள்ளனர் மீம்ஸ் நாயகர்கள்.

hrithik-roshan-mom
hrithik-roshan-mom

மேலும் இந்த மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News