வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

5 ரூபாய் சம்பளத்தில் நடித்த ஜெய்சங்கர்.. அதே படத்தில் ஸ்ரீபிரியா சம்பளத்தை கேட்டா அதிர்ச்சி ஆயிடுவீங்க

தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஜெய்சங்கர். இவர் பல திரைப்படங்களில் டிடெக்டிவ் மற்றும் போலீஸ் கேரக்டரில் நடித்ததால் அவருக்கு இந்தப் பெயர் வந்தது.

எழுபதுகளில் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள் திரையுலகில் பிரபலமாக இருந்தாலும் நடிகர் ஜெய்சங்கர் தன்னுடைய நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார். அவர் நடிக்க வந்த புதிதில் அவருடைய சம்பளம் மிக குறைவான அளவே இருந்தது.

இவர் ஒரு படத்திற்கு சம்பளமாக சில நூறுகள் மட்டுமே வாங்கியுள்ளார். அதிலும் நல்லதுக்கு காலமில்லை என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய் சங்கரின் சம்பளம் வெறும் 5 ரூபாய் மட்டுமே. அந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீபிரியாவின் சம்பளம் மூன்று ரூபாய்.

இதை நம்ப முடியவில்லை என்றாலும் இதுதான் உண்மை. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 50 ஆயிரத்தை தாண்டவில்லை என்பது கூடுதல் தகவல். இந்தப் படம் மட்டுமின்றி அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட் படங்களாகவே இருந்தன.

இப்பொழுது எடுக்கப்படும் குறைந்த பட்ஜெட் படங்களின் செலவே கோடிகளை தாண்டும்.அதிலும் பாடல் காட்சிகள் என்றால் கட்டாயம் வெளிநாட்டுக்கு பறந்து விடுவார்கள். மேலும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தங்களுக்கென்று தனி சாப்பாடு, கேரவன் போன்ற பல வசதிகளை எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் அந்த காலத்து நடிகர்கள் அனைவரும் மிக சாதாரணமாக இருந்தனர். படப்பிடிப்பு முழுவதும் உள்நாட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கும். அதனாலேயே குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் பல திரைப்படங்கள் அதிக வசூலை அள்ளியது.

Trending News