ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விழுந்த இடத்திலேயே எழுந்த நிற்க போராடும் ஜெயம் ரவி.. வரிசை கட்டி காத்திருக்கும் 12 புதுப்பட ப்ராஜெக்ட்டுகள்!

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி யாருக்கும் போட்டியான ஆள் கிடையாது. சினிமாவை ரொம்ப கூலாக ஹேண்டில் பண்ணக்கூடியவர். அவருடைய வெற்றி தோல்வி என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் ரொம்ப பெர்சனலாக எடுத்துக் கொள்ளும் விஷயம்.

சமீப காலமாக அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவும் இல்லை. அவர் பெரிய அளவில் எதிர்பார்த்த பிரதர் படமும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. மீண்டும் தன்னுடைய இடத்தை பிடிக்க ஜெயம் ரவி முழுமூச்சுடன் இறங்கி இருக்கிறார்.

12 புதுப்பட ப்ராஜெக்ட்டுகள்!

அவர் கைவசம் தற்போது 10 ப்ராஜெக்ட் பேச்சு வார்த்தையில் இருக்கின்றன. நடிகர் கவின் நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு உடன் இணைந்து ஜெயம் ரவி படம் பண்ண இருக்கிறார். இது அவருடைய 34 ஆவது படமாக இருக்கும்.

சிவகார்த்திகேயன் கமிட் ஆகி இருக்கும் புறநானூறு படத்தில் இரண்டாவது ஹீரோவாக ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். சிவகார்த்திகேயனுக்கு பெரிய ஹிட் படமாக அமைந்த ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனுடன் இணைந்து ஜெயம்ரவி படம் பண்ண இருக்கிறார்.

ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் பெரிய வெற்றி படமாக அமைந்தது தனி ஒருவன். அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலையில் இயக்குனர் மோகன் ராஜா தீவிரமாக இறங்கி வருகிறார். நடிகர் சந்தானத்தை வைத்து டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி படங்களை இயக்கிய கார்த்திக் யோகி உடனும் இணைய இருக்கிறார்.

மேலும் அடங்கமறு படத்தின் இயக்குனர் தங்கவேலுடனும் படம் பண்ண பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. யாத்திசை படத்தை இயக்கிய தரணி ராஜேந்திரன், டிமான்டி காலனி, கோப்ரா படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து, வேல்ஸ் மூவிஸ் தயாரிப்பிலும் படங்களை பண்ண பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. இதில் வேல்ஸ் மூவிஸ் தயாரிக்கும் படத்தை பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்க வாய்ப்பிருக்கிறது.

யூ வி கிரியேஷன் தயாரிப்பில் ஒரு பெரிய பட்ஜெட் படம், மும்பை கார்ப்பரேட் கம்பெனி தயாரிப்பில் ஒரு படமும் பண்ண இருக்கிறார். கர்நாடகாவை சார்ந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஒரு லைஃப் டைம் ப்ராஜெக்ட் பண்ண இருக்கிறார். இதற்கு மொத்தம் இரண்டு வருடங்கள் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது. மேலே குறிப்பிட்ட அத்தனை படங்களுமே பேச்சு வார்த்தை கடைசி கட்டத்தில் இருப்பதால் விரைவில் உறுதியாகும் எனவும் தெரிகிறது.

Trending News