வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடேங்கப்பா ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு இவ்வளவா!. தனி ஒருவனாக சாதித்து காட்டிய ஹீரோ

Jayam Ravi Birthday: சினிமா துறையில் செல்வாக்கு மிகுந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் நடிகர் ஜெயம் ரவி முழுக்க முழுக்க கடின உழைப்பின் மூலமே இன்று இந்த நிலையில் இருக்கிறார். எல்லோருக்குமே பெயர் அமைவது என்பது அவ்வளவு ஈஸியாக நடந்து விடாது. ஆனால் இவருக்கு தான் நடித்த முதல் படமான ஜெயம் என்ற பெயர் இவரின் பெயருக்கு முன்னால் வந்து ஜெயம் ரவி என்ற அதிர்ஷ்ட பெயராகவே அமைந்துவிட்டது.

என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும், மும்பையில் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்தார் ஜெயம் ரவி. மேலும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். உலகநாயகன் கமலஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும் ஜெயம் ரவி கமலஹாசனின் தீவிர ரசிகர் ஆவார்.

Also Read:லியோ காட்டிய பயத்தில் செப்டம்பரில் வெளிவரும் 30 படங்கள்.. ஒரு ஹிட்டுக்காக தவமிருக்கும் ஜெயம் ரவி முதல் சசிகுமார் வரை

தனி ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஹீரோவாக மாறிய ஜெயம் ரவி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் இவரை பிடிக்காது என்று சொல்லும் ரசிகர்களே இல்லை. மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கூட இவரின் படத்துக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். 20 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவருடைய சொத்து மதிப்பை பற்றி பார்க்கலாம்.

ஜெயம் ரவி கடந்த 2003ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருந்தாலும் இதுவரை 25 படங்களில் தான் நடித்திருக்கிறார். தனக்கான கதைகளை அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் இவரின் சொத்து மதிப்பு 94 கோடி ஆகும். மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு 5 கோடியிலிருந்து தன்னுடைய சம்பளத்தை எட்டு கோடியாக உயர்த்தி இருக்கிறார். மேலும் நடிகை ஜெயம் ரவிக்கு சொந்தமாக விலை மதிக்கத்தக்க ஆடி கார் ஒன்று உள்ளது. மற்றும் இவர் ஸ்போர்ட்ஸ் பைக்குகளும் நிறைய வைத்திருக்கிறார்.

Also Read:நல்ல வேலை முந்திக்கிட்டு கேரியரை காப்பாற்றிய ஜெயம் ரவி.. தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ

நடிகர் ஜெயம் ரவியை அதிர்ஷ்ட நாயகன் என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடங்கி உலக நாயகன் வரை நடிக்க ஆசைப்பட்ட கேரக்டர் பொன்னியின் செல்வனில் வரும் அருண்மொழிவர்மன். இதன் வாசகர்கள் கூட காலம் காலமாக இந்த கேரக்டரில் யார் நடித்தார் நன்றாக இருக்கும் என பல விவாதங்களை நடத்திக் கொண்டு இருந்தார்கள். அப்படி ஒரு கேரக்டர் ஜெயம் ரவிக்கு கிடைத்தது உண்மையிலேயே அவருடைய அதிர்ஷ்டம் தான்.

அதே போன்று ஜெயம் ரவி அடுத்தடுத்து பிளாப் படங்கள் கொடுத்தாலும் எப்போதுமே வெற்றி நாயகனாகத்தான் பார்க்கப்படுகிறார். இதற்கு காரணம் தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வி அடைந்தாலும் அடுத்து ரிலீஸ் ஆகும் ஒரு படம் இவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்து விடும். தற்போது இவருடைய கைவசம் இறைவன், சைரன், தனி ஒருவன் 2 போன்ற படங்கள் இருக்கின்றன.

Also Read:சைக்கோ தனமான மிருகங்களை வேட்டையாடும் ஜெயம் ரவி.. மிரள விட்ட இறைவன் பட ட்ரைலர்

Trending News