ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

57 வயதிலும் இளம் ஹீரோ போல் புகைப்படம் வெளியிட்ட ஜெயராம்.. இப்பவும் கூப்பிட்டு பொண்ணு கொடுப்பாங்க!

கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டாலும் பெரும்பாலான மலையாள திரைப்படங்களிலும் தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு செண்டை தட்டும் கலைஞராகவும், பலகுரல் கலைஞராகவும் விளங்கினார்.

பின்பு 1992 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் அர்ஜுன், பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்த கோகுலம் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெயராம் அறிமுகமானார். அதன் பிறகு ஏகப்பட்ட மலையாளத் திரைப்படத்திலும், தமிழ் திரைப்படத்திலும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா இவர்களுடன் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் கடைசியாக நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயராமின் சமீபத்திய புகைப்படம் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் 57 வயதான ஜெயராம் இன்றும் தன்னுடைய உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்து இளம் கதாநாயகனுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஹேண்ட்சம் ஹீரோ லுக்கில் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்தால் ஜெயராமிற்க்கு இப்பவும் கூப்பிட்டு பொண்ணு கொடுப்பாங்க போல என இணையத்தில் ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு எக்கச்சக்கமான பணம் கமெண்டுகளும் வந்து குவிகிறது.

அத்துடன் இந்தப் புகைப்படத்தில் ஜெயராம், மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் அணிந்திருந்த கூலிங் கிளாஸ் போலவே அணிந்து, மாஸ் ஹீரோ போல் இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

actor-jayaram-cinemapettai
actor-jayaram-cinemapettai

Trending News