Actor Jiiva Own Business: நடிகர் ஜீவா சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் மகன் என்பது எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் இவர் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்ப காலங்களில் சாக்லேட் பாயாக நடித்துக் கொண்டிருந்த இவர் ராம் மற்றும் கற்றது தமிழ் போன்ற படங்களில் தன்னை ஒரு நல்ல நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். ஜீவா ஒரு அளவுக்கு முன்னணி ஹீரோவாக இருக்கும்பொழுது அவருடைய அண்ணன் ஜித்தன் ரமேஷ் நடிப்பதற்கு களமிறங்கினார்.
நடிகர் ஜீவாவுக்கு இப்போது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய படங்கள் இல்லை என்றாலும், அவ்வப்போது சினிமாவில் தலை காட்டி வருகிறார். தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் ஜீவா கடந்த 2011 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு ஹோட்டல் பிசினஸை தொடங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கும் மேலாக இந்த தொழில் அவருக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கொடுத்து வருகிறது. மாதத்திற்கு லட்சக்கணக்கில் இந்த ஹோட்டல் மூலம் சம்பாதித்து வருகிறார்.
நடிகர் ஜீவா கடந்த 2011 ஆம் ஆண்டு தி நகரில் 1 எம்பி என்னும் பெயரில் ரெஸ்டாரன்ட் தொடங்கினார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தான் இந்த ஹோட்டலை திறந்து வைத்தது. சாட் வகைகள் மற்றும் பீட்சா பர்கர், பாஸ்தா போன்ற உணவு வகைகள் இங்கு வழங்கப்படுகிறது. மிகப்பெரிய அளவில் இல்லாமல் இந்த ஹோட்டல் ஒரு சின்ன சேட் ஐட்டம் விற்கும் இடமாகத்தான் இருக்கிறது. ஒரு நான்கு ஐந்து நண்பர்களுடன் நேரம் செலவிடுபவர்கள் இங்கு போகலாம்.
பானி பூரி, சான்விச், பர்கர், வெஜ் ரைஸ், பாஸ்தா, சீஸ் பீட்சா என மாலையில் ஒரு சின்ன சிற்றுண்டியை முடிக்க நினைப்பவர்களுக்கு இந்த இடம் சரியானதாக இருக்கும். இந்த ரெஸ்டாரன்ட் ஸ்விகி மற்றும் சோமேட்டோ உடன் இணைந்து பணிபுரிந்து வருகிறது. இந்த ரெஸ்டாரன்ட்டின் மிகப்பெரிய மைனஸ் ஆக சொல்லப்படுவது இங்கு சாப்பிடுபவர்களுக்கு குடிக்கிற தண்ணீர் இலவசமாக கொடுப்பது கிடையாதாம். காசு கொடுத்ததால் வாங்க வேண்டுமாம்.