புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூர்யா தனுசுக்கு போட்டியாக பாலிவுட் போகும் ஹீரோ.. ஹாரர் மூவியில் கமிட்டான காமெடி நடிகர்

Actor jump to Bollywood: என்னதான் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தாலும் சிலருக்கு பாலிவுட் பக்கம் போயி பிரபலமாக வேண்டும் என்ற ஆசை இருக்க தான் செய்கிறது. ஆனால் அங்குள்ள நடிகைகள் யாரும் இங்குள்ள மக்களை கவர வேண்டும் என்று எந்த மெனக்கெடும் செய்வதில்லை. இதற்கு மாறாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிலர் பாலிவுட்டின் மோகத்தால் அங்கேயும் கால் தடம் பதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் தற்போது சூர்யா பாலிவுட்டை கெதி என்று அங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். காரணம் அங்கே பாலிவுட் இயக்குனருடன் கூட்டணி வைத்து ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார். அத்துடன் ஹிந்தியில் சுதா கொங்கரா இயக்கம் சூரரைப் போற்று படத்தில் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதன் மூலம் அங்கேயும் பேரும் புகழையும் சம்பாதித்து சம்பளத்தை அதிகமாக உயர்த்தலாம் என்று ஒரு ஆசையில் களமிறங்கி இருக்கிறார். இவரை போலவே ஏற்கனவே பாலிவுட்டில் கால் தடம் பதித்தவர் தான் தனுஷ். தற்போது இவர்களுக்கு போட்டியாகவே இன்னொரு நடிகரும் பாலிவுட் பக்கம் போயிருக்கிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நுழைந்தவர் போகப் போக கதையின் நாயகனாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

Also read: சுதா கொங்கரா படத்தை விட முக்கியமான வேலையில் சூர்யா.. குட்பை போட்ட சிங்கம்

அதன் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி தற்போது இவர் இல்லாத படமே இல்லை என்பதற்கு ஏற்ப கைவசம் பல படங்களை வைத்துக்கொண்டு சுற்றி வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை தன்னுடைய உடல் தோற்றத்திலும் பேச்சிலும் மக்களை கவர்ந்த யோகி பாபு தான். இவர் ஏற்கனவே ஜவான் படத்தில் தமிழில் வரும் காட்சிகளில் நடித்தார்.

ஆனால் ஹிந்தியில் இவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவரை வைத்து பாலிவுட் இயக்குனர் அனீஸ் பாஸ்கி ஹாரர் மூவியை எடுக்கப் போகிறார். இந்த படம் அவருக்கு கிளிக் ஆகிவிட்டால் தொடர்ந்து அங்கேயும் படம் நடிப்பதாக இருக்கிறார். ஏற்கனவே தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு ஆளே இல்லாமல் மிகப்பெரிய பஞ்சம் இருக்கிறது.

இதுல வேற இவர் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வந்து கொண்டிருந்தார். இப்பொழுது மொத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாலிவுட்டில் பிஸியாகிவிட்டால் இங்கே நடிப்பது மிக கம்மியாக போய்விடும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த பலரும் கொஞ்சம் பிரபலமானதும் வந்த பாதையை மறந்து அக்கட தேசத்தில் சுற்றுவது வழக்கமாகி வருகிறது.

Also read: அடுத்தடுத்து வெளியாக உள்ள சூர்யாவின் 5 மிரட்டலான படங்கள்.. வாடிவாசலுக்கு பின் சூப்பர் ஸ்டார் இயக்குனருடன் கூட்டணி

Trending News