திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித், விஜய் ஒரு மேட்டரே இல்ல, நேரடியாக பாலிவுட் தான் டார்கெட்.. அடுத்தடுத்து உருவாக உள்ள கமலின் 4 படங்கள்

Actor Kamal Haasan: உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார். அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தற்போது கமலிடம் கைவசம் நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. மேலும் தயாரிப்பாளராகவும் கமல் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவின் படங்களை தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார்.

இந்தியன் 2: கமலஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக இருக்கிறது. சித்தார்த், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர் விவேக் போன்ற பல நட்சத்திரங்களோடு உருவான இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் 25 சதவீத வேலைகள் மட்டுமே இன்னும் பாக்கி இருக்கிறது.

Also Read:பூஜையே போடல அதுக்குள்ள இத்தனை கோடியா.? வாய் பிளக்க வைத்த KH-233

ப்ராஜெக்ட் கே: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் கமலஹாசன் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கிறார். இந்த படம் கமலுக்கு பல வருடங்களுக்குப் பிறகு இந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய காத்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் கமல் 21 கெட்டப்புகள் போட இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

KH233: நடிகர் அஜித்குமாரின் ஆஸ்தான இயக்குனரான ஹெச் வினோத்துடன் கமலஹாசன் தன்னுடைய 233 வது படத்தில் இணைய இருப்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாக இருக்கிறது. ஆனால் கமல் இந்த படத்திற்கு குறுகிய கால கால்ஷீட் தான் கொடுத்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. யோகி பாபு அல்லது விஜய் சேதுபதி ஹீரோ கேரக்டரில் நடிக்க கமல் இந்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:தசாவதாரத்தை விட இரண்டு மடங்கு கெட்டப் போட்டு அசத்த போகும் கமல்.. இது அல்லவா பிரம்மாண்டம்

KH234: இயக்குனர் மணிரத்தினத்துடன் கமலஹாசன் இணைந்து பணியாற்றிய நாயகன் திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் ஒரு மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்ற இருக்கிறது. கமலின் 234 ஆவது படத்தை மணிரத்தினம் இயக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் உலகநாயகன் கமலஹாசன் நடிகர் சிவகார்த்திகேயனின் 21 வது படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நடிகர் சிலம்பரசனின் 48வது படத்தையும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

Also Read:மாஸ் இயக்குனருடன் இணைந்த உலக நாயகன்.. ஆரவாரமாக வெளியான KH-233 அறிவிப்பு

Trending News