வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தசாவதாரத்தை விட இரண்டு மடங்கு கெட்டப் போட்டு அசத்த போகும் கமல்.. இது அல்லவா பிரம்மாண்டம்

Actor Kamal Haasan – Project K: உலக நாயகன் கமலஹாசனுக்கு அடுத்து இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து கமல் மற்றும் சங்கர் இணைந்து இதன் இரண்டாம் பாகத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று உதயநிதியும் அறிவித்துவிட்டார். இதற்கான அடுத்த கட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே கமலஹாசன் அடுத்தடுத்து தன்னுடைய திட்டங்களை பற்றி அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவின் படங்களை தயாரிக்க இருக்கும் கமலஹாசன், தன்னுடைய 233 வது படம் இயக்குனர் ஹெச் வினோத் உடனும், 234 வது படம் இயக்குனர் மணிரத்தினத்துடனும் பண்ண இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

Also Read:மாஸ் இயக்குனருடன் இணைந்த உலக நாயகன்.. ஆரவாரமாக வெளியான KH-233 அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது கமலஹாசன் மற்றும் ஹெச் வினோத் இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் கமல் ஹீரோவாக நடிக்காமல் முக்கிய வேடத்தில் குறுகிய நாள் கால்ஷீட்டில் நடிக்க இருக்கிறார். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த கதையில் யோகி பாபு அல்லது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உலகநாயகன் கமலஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், சில தினங்களுக்கு முன்பு பட குழுவும் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த படத்திற்காக அவருக்கு 150 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

Also Read:நடிகர்களின் வலையில் சிக்கி கொள்ளாமல் தப்பித்த நடிகை.. கமல் ரஜினியுடன் நடிப்பதற்கு அறவே மறுத்துவிட்ட நாயகி

தற்போது இந்த கேரக்டர் பற்றி மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது. ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் வில்லனாக வரும் கமலஹாசன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் இந்த படத்திற்காக கமல் 21 கெட்டப் போட இருக்கிறாராம். கமல் மட்டும் இந்த படத்திற்காக 21 கெட்டப்பை போட்டு விட்டால் கமலின் வளர்ச்சி இந்திய சினிமாவில் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படும்.

இந்த கெட்டப்புகளை பற்றி இனிவரும் நாட்களில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல் ஏற்கனவே தசாவதாரம் திரைப்படத்தில் 10 கெட்ட போட்டு நடித்து தமிழ் சினிமாவை வேறொரு கட்டத்திற்கு கொண்டு சென்றார். தற்போது அதைவிட இரண்டு மடங்கு அதிகமான கெட்டப்புகளுக்கு திட்டமிட்டு இருப்பது சினிமா மீது இருக்கும் அவருடைய தீராத ஆசையை தான் காட்டுகிறது.

Also Read:ரஜினி, கமல் படங்களில் எங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது.. சாய் பல்லவி போல் தெரிந்து ஓடும் 5 ஹீரோயின்கள்

Trending News